கம்பராமாயணம் 5828 · சுந்தர 13.24

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆதலால் - ஆகையால்; அரக்கனை எய்தி - அரக்கனாகிய இராவணனைச் சந்தித்து; ஆற்றலும் நீதியும் மனம் கொள நிறுவி - இராமபிரானுடைய வலிமையையும், நெறி முறையையும் அவன் உள்ளத்தில் பதியும்படிச் செய்து; நின்றவும் - (அதன் பின்பும் இசையாது போனால்) (இதுவரை என்னால் கொல்லப்பட்டவை போக) மீதியாக உள்ள அரக்கர் சேனைகளில்; பாதியின் மேல் செல நூறி - பாதிக்கு மேலாக அழித்துவிட்டு; பைப்பைய போதலே கருமம் - (அவசரப் படாமல்) மெதுவாகப் போவதே நான் செய்யத்தக்க காரியமாகும்; என்று - என்று எண்ணி; அனுமன் போயினான் - அனுமன் அடங்கி, அந்த அரக்கருடன் சென்றான்.

நிறுவுதல், நூறுதல், போதல் இவைகளைத் தனது கடமையாகக் கொண்டான் அனுமன். ஒன்றன் பின் ஒன்றாக இவைகளைச் செய்வது என்ற முடிவுடன், அடக்கமாக அனுமன் அரக்கருடன் சென்றான் என்க. நூறுதல் - அழித்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "So, to go before the demon and fix firmly in his mind
  2. my lord's might and justice, and then, of those that remain,
  3. to destroy more than half, and go back unhurried, at my ease:
  4. that is my task," thought Aṉumaṉ, and went on.

What the poem says

Aṉumaṉ settles his plan in three steps. First he will impress on Irāvaṇaṉ the might and righteousness of Irāmaṉ; then, if the demon king will not yield, he will destroy more than half of the troops still left; and finally he will make his way home without hurry.

With that decided, he goes along quietly with his captors.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ātalāṉ arakkaṉai eyti āṟṟalum
nītiyum maṉam koḷa niṟuvi niṉṟavum
pātiyiṉ mēl cela nūṟi paip paiyap
pōtalē karumam'eṉṟu aṉumaṉ pōyiṉāṉ.