கம்பராமாயணம் 5830 · சுந்தர 13.26
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தூதுவர் ஓடினர் - இந்திரசித்தால் அனுப்பப்பெற்ற தூதர்கள் ஓடிச்சென்று; தொல்லை நாள் - பண்டு; மாதிரம் கடந்தவன் - திசைகளை எல்லாம் வென்றவனாகிய இராவணனை; குறுகி - அணுகி; தொழுது - வணங்கி; மன்ன - “அரசனே!; நின் காதலன் - உனது மகனான இந்திரசித்து; மரைமலர் கடவுள் வாளியால் - தாமரைமலர் மீது விளங்கும் பிரம்மதேவனது படையாகிய அத்திரத்தால், (பிரம்மாத்திரம்); ஏதில் வானரம் பிணிப்புண்டது என்றார் - பகைமை கொண்ட குரங்கு கட்டுப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள்.
தூதுவரின் செயலும் சொல்லும் கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Messengers ran, bowed, and came up to him
- who long ago had conquered all the quarters: "King! By your
- beloved son, with the arrow of the god of the lotus flower,
- the hostile monkey has been bound," they said.
What the poem says
Runners sent by Intiracittu hurry ahead to Irāvaṇaṉ, the king who long ago conquered every direction. Bowing, they report that his son has bound the enemy monkey with the weapon of Brahmā, the god who sits on the lotus.