கம்பராமாயணம் 5831 · சுந்தர 13.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கேட்டலும் - அதனைக் கேட்டவுடன்; உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான் - மகிழ்ச்சியால் ஓங்கிய மனமுடைய இராவணன்; கிளர் சுடர் கெட்ட வான் என - விளங்குகின்ற (இரவில்) சந்திரன் ஒழியப் பெற்ற ஆகாயம் போல; ஈட்டு இருள் விழுங்கிய - செறிதலுள்ள இருளினால் விழுங்கப்பட்ட (மிகக்கறுத்த); மார்பின் - தன் மார்பினிடத்து; யானையின் கோடு எதிர் பொரு - (முன்) திக்கஜங்களின் தந்தங்களோடு புரண்டு மோதிக் கொண்டிருந்த; பேர் ஆரம் கொண்டு எதிர் நீட்டினான் - பெரிய முத்துமாலையைக் கழற்றிக் கொண்டு (நற்செய்தி சொன்ன தூதர்க்கு) வெகுமதியாகக் கொடுத்தான்.
தூதுவர் கூறிய நற்செய்தி இராவணனை எவ்வளவு மகிழ்வித்துள்ளது என்பதை, அவன் தூதுவர்க்குக் கொடுத்த முத்து மாலைப் பரிசு தெரிவிக்கின்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as he heard it, from his chest, which, like a sky whose bright moon has gone,
- was swallowed in massed darkness, the necklace that had clashed against the elephants'
- tusks, the great pearl chain, he took and held out
- to them, he whose heart swelled high with joy.
What the poem says
Irāvaṇaṉ is so delighted by the news that he takes the great pearl necklace off his own chest and hands it to the messengers as a reward.
This is the necklace that once ground against the tusks of the elephants guarding the directions when he fought them. With it gone, his dark chest looks like a night sky from which the moon has disappeared.