கம்பராமாயணம் 5834 · சுந்தர 13.30

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கடிபொழில் இறுத்தனன் - மணம் மிக்க அசோகவனத்தை ஒடித்தழித்தான்; எண் இலோர் பட ஒறுத்தனன் - அளவிறந்த அரக்கர்கள் அழியுமாறு கொன்றிட்டான்; என்று கொண்டு - என்று அவ்வப்போது சொல்லக் கேட்டுணர்ந்து; உவக்கின்றாள் - மகிழ்கின்றவளான சீதாபிராட்டிக்கு; கறுத்தல் இல் சிந்தையாள் - களங்கமில்லாத மனத்தை உடையவளான திரிசடை என்பவள்; வீரற்கு உற்றதை - மகாவீரனான அனுமனுக்கு ஏற்பட்ட துன்ப நிலையை; உயிர் வெறுத்தனள் சோர்வுற - தன் உயிரை வைத்துக் கொண்டு வாழ்வதில் வெறுப்புற்றவளாய், தளர்ச்சி அடையும்படி; கவன்று கூறினாள் - மனக்கவலையுடன் சொன்னாள். அனுமன் செய்த ஆற்றல் மிக்க செயல்களையும், அவனுக்கு நேர்ந்த துன்ப நிலைமையையும் திரிசடை, சீதைக்கு அவ்வப் போது கூறுகின்றாள் என்று உணரலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To her who had been rejoicing to hear, "He has wrecked the fragrant grove,
  2. he has punished them so that countless died," so that she lost all wish to live
  3. and sank down, what had befallen the hero
  4. she whose mind knew no malice told her in sorrow.

What the poem says

Cītai has been hearing news of Aṉumaṉ's exploits, how he wrecked the grove and killed demons beyond counting, and has been rejoicing.

Now Tiricaṭai, the kind-hearted demoness who befriends her, sadly tells her that the hero has been captured, and Cītai sinks into such despair that she no longer wants to live.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"iṟuttaṉaṉ kaṭipoḻil eṇṇilōr paṭa
oṟuttaṉaṉ"eṉṟu koṇṭu uvakkiṉṟāḷ uyir
veṟuttaṉaḷ cōrvuṟa vīraṟku uṟṟatai
kaṟuttal il cintaiyāḷ kavaṉṟu kūṟiṉāḷ.