கம்பராமாயணம் 5835 · சுந்தர 13.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேனி பொடி உற - உடம்பு புழுதி படிந்திருக்க (அதனால்); ஓவியம் புகை உண்டது போல் ஒளிர் - சித்திரம், புகை மூடி ஒளி குறைந்தது போல விளங்குகின்ற; பூவின் மெல் இயல் - மலர் போன்ற மென்மைத் தன்மையளான சீதாபிராட்டி; பாவி வேடன் கை பார்ப்பு உற - பாவியாகிய ஒரு வேடன் கையில், தன் குஞ்சு அகப்பட்டுக் கொள்ள (அதனால்); பேதுறும் தூவி அன்னம் அன்னாள் - வருத்தம் அடைகிற மென்மையான இறகுகளை உடைய அன்னப்பறவையைப் போன்றவளாய்; இவை சொல்லினாள் - (அனுமனைக் குறித்து) இவ்வார்த்தைகளைச் சொல்லிப் புலம்பினாள்.
தாய்க்குத் தன் குழந்தையிடம் உள்ள அவ்வளவு அன்பு, உலகத்தாயான சீதாபிராட்டிக்கு அனுமனிடம் உள்ளது என்பதை இந்த உவமையால் உணரலாம். இந்திரசித்துக்கு, பாவி வேடனும், அனுமனுக்கு, வேடன் கையகப்பட்ட அன்னக் குஞ்சும், சீதைக்கு, அன்னப்பறவையும் உவமைகள் ஆகும். சொல்லிய வார்த்தைகள், அடுத்த நான்கு கவிதைகளில் வருவது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Shining like a painting clouded over by smoke,
- she, gentle as a flower, her body grimed with dust,
- like a swan distraught when its chick is caught in a wicked hunter's hands,
- soft-feathered, spoke these words.
What the poem says
Cītai, dust-covered and dimmed like a painting darkened by smoke, laments like a mother swan whose chick has been seized by a cruel hunter.
In the simile Intiracittu is the hunter, Aṉumaṉ the captured chick and Cītai the mother bird: she loves Aṉumaṉ as a mother loves her child. Her lament fills the next four verses.