கம்பராமாயணம் 5836 · சுந்தர 13.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உற்று உண்டாய விசும்பை - மிகப் பரந்துள்ளதான ஆகாயத்தை; உருவினாய் முற்றுண்டாய் - ஊடுருவிச் சென்று அளவளாவி நிறைந்து; கலை யாவையும் முற்றுற கற்றுண்டாய் - சகல கலைகளையும் முழுவதும் பொருந்த (சூரிய பகவானிடம்) கற்றுத் தேர்ந்தாய் (அப்படிப்பட்ட நீ); ஒரு கள்ள அரக்கனால் - ஒரு வஞ்சனை உடைய இராக்கதனால்; பற்றுண்டாய் - சிறைப்படுத்தப் பெற்றாய்; அறப்பான்மை இதுவோ - அறத்தின் இயல்பு இதுதானோ?
“சகல கலைகளையும் கற்ற நீ, ஒரு கள்ள அரக்கனால் கட்டுண்டாயே” என்று அனுமனைப் பாராட்டி வருந்தினாள் பிராட்டி. ஆற்றலும் அறிவும் பெற்றவர்கள் நன்மை அடைதல்தான் அறத்தின் பான்மை. இங்கு, அதற்கு நேர் மாறான பயன் ஏற்பட்டுள்ளதால் அறத்தின் பான்மையோ! என்று சீதா பிராட்டி ஐயமுற்றாள் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You pierced right through the vast expanse of sky
- and filled it whole; every art there is you learned through and through
- and mastered; and by one deceitful demon
- you have been seized: is this the way of Dharma?"
What the poem says
Cītai praises Aṉumaṉ even as she grieves. He flew across the boundless sky and learned every branch of knowledge, from the Sun himself as tradition tells, and yet a treacherous demon has taken him captive.
Righteousness should reward strength and wisdom; seeing the opposite happen, she asks whether this can really be the way of Dharma.