கம்பராமாயணம் 5837 · சுந்தர 13.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீ கடர் கடந்து புகுந்தனை - நீ, கடலைக் கடந்து இங்கு வந்தாய்; கண்டகர் உடர் கடந்தும் - முள் போன்று கொடியவர்களான பல அரக்கர்களுடைய உடம்பின் வலிமையை அழித்து வெற்றி கொண்டு நின்றும்; நின் ஊழி கடந்திலை - உனது வாழ்நாள் ஒழியப் பெற்றிலை (இவ்வாறு); அடர் கடந்த திரள் புயத்து ஐய! - பகைவர் வலிமையை வென்ற பருத்த தோள்களை உடைய ஐயனே! (நீ அரக்கர்கள் கையில் சிக்கியதனால்); வந்து இடர் மேலும் இடர்கள் தந்தனை - (கிட்கிந்தையினின்று) இங்கு வந்து எனக்குத் துன்பத்தின் மேலும் துன்பங்களை உண்டாக்கியவனானாய்.
இராமபிரானைப் பிரிந்ததனாலான துன்பத்தின் மேலும், இராம தூதன் பகைவர் கையில் கட்டுண்டதனாலான துன்பம் சேர்ந்து மேன்மேலும் வருத்துதலால் “வந்து இடர்கள் மேலும் இடர் தந்தனை” என்று பிராட்டி கூறி வருந்தினாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You crossed the sea and came in; though you overcame
- the bodies of the thorn-like demons, your days have not run their course;
- my lord, with massive shoulders that overcame all force,
- by coming here you have heaped sorrow upon sorrow."
What the poem says
Cītai speaks to the absent Aṉumaṉ. He leapt the ocean, defeated the cruel demons and is still alive, yet his capture has only added a new grief to the grief she already bears at being separated from Irāmaṉ.