கம்பராமாயணம் 5838 · சுந்தர 13.34

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆழி காட்டி - இராமபிரானது கணையாழியை யான் காணுமாறு கொண்டுவந்து கொடுத்து; என் ஆருயிர் காட்டினாய்க்கு - (போக்க நினைத்த) என் அரிய உயிரை அழியாது நிற்கச் செய்த உனக்கு; ஊழி காட்டுவென் என்று உரைத்தேன் - (அதற்கு ஈடாக) கற்ப கோடி காலம் உன் வாழ்நாள் நீடிக்கும் என்று உனக்கு உறுதிமொழியான ஆசி கூறினேன்; அது வாழி காட்டும் என்று உண்டு - அது பொய்க்காது உன் வாழ்நாளை நீட்டிக்கும் என்பது உறுதியாக உள்ளது; (அவ்வாறாக); உன் வரை புயம் பாழி காட்டி - உனது மலை போன்ற தோள்களின் வலிமையை போரில் தோன்றச் செய்து, (முடிவில்); அரும்பழி காட்டினாய் - நீக்குதற்கு அரிய ஒரு பழியை உண்டாக்கிக் கொண்டாய். (இதற்கு நான் என்ன செய்வேன்.)

திருவாழியே பிராட்டியின் உயிரை நிலைக்கச் செய்ததால், “ஆழிகாட்டி என் ஆருயிர் காட்டினாய்” என்றாள். “அரும்பழி” என்பது இராமதூதன் பகைவர் கையில் அகப்பட்டதாகும். “என் வாழ்த்துப் படி நீடூழி வாழ்வை யாயினும் அரக்கர் கையில் அகப்பட்டதனால், வாழ்த்து பழுதுபட்டதோ” என்று நினைத்து வருந்தினாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "To you, who by showing me the ring showed me my precious life again,
  2. I said, 'I shall show you an age of ages'; that blessing
  3. will surely show you long life; yet by showing the might
  4. of your mountain-like shoulders you have shown me a grievous shame."

What the poem says

Cītai recalls how Aṉumaṉ saved her life by bringing Irāmaṉ's signet ring just as she was about to take her own life, and how in gratitude she blessed him to live for ages.

Her blessing will hold and he will live, she says, but by showing his strength in battle he has ended up with the disgrace of being captured by the enemy. The verse plays on the word "show" in every line.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḻi kāṭṭi eṉ ār uyir kāṭṭiṉāykku
ūḻi kāṭṭuveṉ eṉṟu uraittēṉ atu
vāḻi kāṭṭum eṉṟu uṇṭu uṉ varaippuyap
pāḻi kāṭṭi arum paḻi kāṭṭiṉāy.