கம்பராமாயணம் 5839 · சுந்தர 13.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எனக்கு ஆருயிர் - எனக்கு அரிய உயிரை; தந்த நீ - அளித்த நீ; கண்டு போயினை - (இராமபிரான் ஆணைப்படி) என்னைக் கண்டு சென்றாய் (அதற்கு மேல்); நீள்நெறி காட்டிட - நீண்ட வழியைக் காட்டிக் கொண்டு நீ முன் வர; மன்னவன் - தலைவனான இராமபிரான் (இங்கு வந்து); மண்டு போரில் - அடர்ந்த கடும் போரினிடத்து; அரக்கனை மாய்த்து - இராவணனைக் கொன்று; எனைக் கொண்டு போம் - என்னைச் சிறை மீட்டுக் கொண்டு போவான்; எனும் கொள்கையை - என்று நான் நம்பிக் கொண்டிருந்த கோட்பாட்டை; தண்டினாய் - தவிர்த்து நடந்தாய் (நீக்கிவிட்டாய்).
வளர்த்தவனே அழித்தாற் போல, ஆருயிர் தந்த நீயே, “இராமபிரான் என்னை மீட்பான்” என்ற என் நம்பிக்கையை அழித்து விட்டாய் என்றபடி. தண்டுதல் - தவிர்ந்து செல்லுதல். “கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்” (முதுமொழிக்காஞ்சி - தண்டாப்பத்து - 3) தண்டாய் - திருப்பிவாங்கிக் கொண்டாய் என்பது பழைய உரை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "'Having seen me you would go, and as you showed the long road,
- our king, in furious battle, would destroy the demon and
- take me away': that hope of mine
- you have struck down, you who gave me back my precious life."
What the poem says
Cītai had pinned her hopes on a simple plan: Aṉumaṉ would find her, return and guide Irāmaṉ along the long road to Ilaṅkai, and Irāmaṉ would kill Irāvaṇaṉ and rescue her.
Now the very one who restored her will to live has, by getting caught, destroyed that hope, like someone who raises a plant only to uproot it.