கம்பராமாயணம் 5841 · சுந்தர 13.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பெருந் தகைப் பெரியோனை - பெருமைக் குணத்திலும் அறிவிலும் பெரியோனான அனுமனை; பிணித்த போர் முருந்தன் - கட்டிய, போரில் வல்லவனான இந்திரசித்து; மற்றை உலகு ஒரு மூன்றையும் - இலங்கையோடல்லாது மற்ற (சுவர்க்கம் பூமி பாதலம்) மூன்று உலகங்களையும்; அரும் தவப்பயனால் - தான் முன் செய்த அரிய தவப் பயனால்; அரசு ஆள்கின்றான் இருந்த - அரசனாயிருந்து ஆள்கின்ற இராவணன் தங்கியிருந்த; அ பெருங் கோயில் - அந்தப் பெரிய அரண்மனையில்; சென்று எய்தினான் - சென்று அடைந்தான். இராவணன் தங்கியிருந்த அரண்மனைக்கு, இந்திரசித்து, அனுமனைக் கட்டிய நிலையில் கொண்டு சென்றான் என்பதாம். முருந்தன் - சமர்த்தன்; திறமை வாய்ந்தவன். முருந்து - பறவைகளின் வலிய அடிக் குருத்து. பறவையின் அடிக்குருத்து போன்று, இராவணனுக்கு உதவுபவன் இந்திரசித்து என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who had bound that great one of noble worth, the battle-hardened
- warrior, came to the palace of him who, over the three other worlds,
- by the fruit of rare penance, rules as king,
- that great palace where he dwelt, and arrived there.
What the poem says
Intiracittu, with Aṉumaṉ in bonds, reaches the great palace of Irāvaṇaṉ, who by the power of his past austerities rules not only Ilaṅkai but heaven, earth and the underworld.
The word used for Intiracittu likens him to the strong base of a bird's feather: he is the support on which his father's power rests.