கம்பராமாயணம் 5842 · சுந்தர 13.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அலங்கல் வெண்குடை - முத்து முதலிய மணிச்சரங்கள் அசையப் பெற்ற வெண் கொற்றக் குடையானது; தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி - மூவுலகங்களுக்கும் ஒளி வீசும் படி, வேறு ஒரு சந்திரன் சிறந்து விளங்குவது போல; தண் நிழல் அவிர் ஒளி பரப்ப - குளிர்ச்சியான நிழலையும் விளங்குகின்ற ஒளியையும் பரவச் செய்யவும்; வலம் கொள் தோளினால் - தன் வலிமை கொண்ட தோள்களால்; மண் நின்று வான் உற எடுத்த - தரையிலிருந்து ஆகாயத்தை அளாவுமாறு மேலே தூக்கிய; பொலம்கொள் மாமணி வெள்ளியம் குன்று என பொலிய - அழகு கொண்ட பெரிய சிறந்த கயிலையங் கிரியாகிய வெள்ளி மலைபோல, விளங்கவும்.
“இருந்த” என (5வது பாடல்) முடியும். குடைக்கு மதியும், வெள்ளியங்கிரியும் உவமைகளாகக் கூறப்பட்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As if a second moon had risen for all three worlds,
- his garlanded white parasol spreading cool shade and shining light,
- like the silver mountain, rich with gold and great gems, that he of the mighty shoulders
- lifted from the earth till it touched the sky, it shone.
What the poem says
A sequence of five verses now describes Irāvaṇaṉ on his throne; the sentence is completed only in the fifth.
First his royal white parasol, hung with strings of pearls. It shines like a second moon lighting the three worlds, and like the silver mountain Kailāsa, which Irāvaṇaṉ once lifted from the earth with his mighty arms.