கம்பராமாயணம் 5843 · சுந்தர 13.39

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புள் உயர்த்தவன் திகிரியும், புரந்தரன் அயிலும்,
தள்ளின் முக்கணான் கணிச்சியும், தாக்கிய தழும்பும்,
கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர்வாள்,
வள் உகிர்ப் பெருங் குறிகளும் புயங்களின் வயங்க.

பொருள் · Meaning in Tamil

புள் உயர்த்தவன் திகிரியும் - கருடப் பறவை விளங்க உயர்த்தப்பெற்ற கொடியை உடைய திருமாலினது சக்கராயுதமும்; புரந்தரன் அயிலும் - இந்திரனது வச்சிராயுதமும்; தள் இல் முக்கணான் கணிச்சியும் - விலக்கமுடியாத, முக்கண்ணனாகிய சிவபிரானது சூலாயுதமும்; தாக்கிய தழும்பும் - தம் மீது பட்டு உண்டாக்கிய வடுக்களும்; கள் உயிர்க்கும் மென் குழலியர் - தேனைச் சொரியும் மிருதுவான கூந்தலை உடைய தன் காதல் மகளிர்; முகிழ் விரல் - அரும்பு போல் குவிந்த விரல்களில் உள்ள; கதிர்வாள் வள் உகிர் - சுடரோடு கூடிய வாள் போன்ற கூரிய நக நுனிகளால் உண்டாகிய; பெரும் குறிகளும் புயங்களில் வயங்க - பெரிய அடையாளங்களும் பெரிய தோள்களில் விளங்கவும். இராவணனது வீரத்துக்கும் காதலுக்கும் அடையாளமாக விளங்குகின்றன அவன் தோள்களில் காணப்படும் வடுக்கள் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the scars where the discus of him whose banner bears the bird, and Purantaraṉ's spear,
  2. and the axe of the unfailing Three-Eyed One had struck him,
  3. and the bright, blade-like, sharp nails on the bud-like fingers
  4. of women whose soft hair breathes honey had left their great marks, shining on his arms.

What the poem says

Irāvaṇaṉ's arms carry two kinds of marks. Some are battle scars left by the weapons of the gods: the discus of Viṣṇu, who flies the eagle Garuḍa on his banner, Intiraṉ's thunderbolt and Śiva's axe.

Others are love marks, scratched by the sharp nails of his many women. Together they advertise his valour and his amours.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puḷ uyarttavaṉ tikiriyum, purantaraṉ ayilum,
taḷ il mukkaṇāṉ kaṇicciyum, tākkiya taḻumpum,
kaḷ uyirkkum meṉ kuḻaliyar mukiḻ viral katirvāḷ,
vaḷ ukirp peruṅ kuṟikaḷum puyaṅkaḷil vayaṅka.