கம்பராமாயணம் 5844 · சுந்தர 13.40

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

துன்று செம்மயிர் சுடர் நெடுங்கற்றைகள் சுற்றி நின்று திக்குற - அடர்ந்த சிவந்த மயிர்களின் ஒளியுள்ள நீண்ட தொகுதிகள் சுற்றிலும் பரந்து நின்று எல்லாத்திசைகளிலும் அளாவ; நிரல்பட கதிர் குழாம் நிமிர - (அவற்றினின்று) வரிசை வரிசையாக (சிவந்த) ஒளிப் பிழம்புகள் (அவனது கரிய உடலின் மேல்) உயர்த்தெழுந்து விளங்குவதாலும்; ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப - பொருந்திய கோபத்தால் எழுந்த பெருமூச்சாகிய பெரிய புகை வெளிப்படுவதாலும்; தென் திசைக்கும் ஓர் வடஅனல் திருத்தியது என்ன - தெற்குத் திசைக்கும், ஒரு வடவைத் தீயை, அமைக்கப்பட்டதென்று சொல்லும்படியாகவும்.

இராவணனது செம்மயிர்க்கற்றைகளும், அவன் விடும் கோபப் பெருமூச்சும், தென் திசைக்கும் ஒரு வட அனல் (வடவாமுகாக்கினி) அமைந்தவை போன்றிருந்தன என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With long, bright sheaves of thick red hair spread all about him
  2. reaching to every quarter, and rows of rays rising up,
  3. and breathing out the great smoke that was the breath of his rage,
  4. it was as if the fire of the northern sea had been set up for the south as well.

What the poem says

Irāvaṇaṉ's thick red hair streams out in every direction like rays of flame against his dark body, and his angry breathing pours out like smoke.

He looks like the vaṭavāmukha fire, the mare-headed blaze said to burn under the ocean in the far north. Here, it seems, a second one has been installed in the south.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuṉṟu cemmayirc cuṭarneṭuṅ kaṟṟaikaḷ cuṟṟi,
niṉṟu tikkuṟa, niralpaṭak katirk kuḻām nimira,
oṉṟu cīṟṟattiṉ uyirppu eṉum perum pukai uyirppa
teṉ ticaikkum ōr vaṭavaṉal tiruttiyatu eṉṉa.