கம்பராமாயணம் 5845 · சுந்தர 13.41

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மரகதம் கொழும் கதிரொடு மாணிக்க நெடுவாள் - (தன் முடிகளிலுள்ள) மரகதங்களின் செழுமையான ஒளிகளுடனே மாணிக்கங்களின் நீண்ட ஒளியும்; நரக தேயத்துள் நடுக்குறா இருளையும் நக்க - நரகலோகத்தினுள்ளே (எச்சுடர்க்கும்) அஞ்சாது நிறைந்திருக்கின்ற இருளையும் தாவி விழுங்க; சிரம் அனைத்தையும் திசைதொறும் திசை தொறும் செலுத்தி - தன் பத்துத் தலையையும், எல்லாத் திசைகளிலும் செல்லுமாறு பரப்பிக் கொண்டு; உரகர் கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப - பாம்புகளுக்கு அரசனான ஆதிசேடன் மகிழ்ச்சியோடு அரசு கட்டிலில் வீற்றிருந்தது போல் விளங்கவும்.

இராவணன் ஆதிசேடனுக்கு ஒப்பாக வீற்றிருந்தான் என்க. இராவணன் பத்துத் தலைகளை உடையவனாதலால், ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேடனுக்கு உவமையாக்கப் பெற்றான். நரகலோகம் எப்போதும் இருளால் மூடப்பட்டிருக்கும் என்பதை, “அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்” (121. பரி - உரை) என்ற குறளாலும் உணரலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the rich rays of emerald and the long gleam of ruby
  2. licking up even the darkness that never trembles in the land of hell,
  3. and sending out his heads, one to each and every quarter,
  4. he was like the king of serpents seated at ease upon his throne.

What the poem says

The emeralds and rubies on Irāvaṇaṉ's crowns shine so brightly that they could swallow even the darkness of hell, a darkness no light can shake; the commentary cites a Tirukkuṟaḷ couplet on the "utter darkness" awaiting the undisciplined.

With his ten heads spread out in all directions, he looks like Ātiśēṣaṉ, the many-headed king of serpents, enthroned in state.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1marakatak koḻuṅ katiroṭu māṇikka neṭuvāḷ,
naraka tēyattuḷ naṭukkuṟā iruḷaiyum nakka
ciram aṉaittaiyum, ticaitoṟum ticaitoṟum celutti,
urakarkōṉ iṉitu, aracu vīṟṟiruntaṉaṉ oppa.