கம்பராமாயணம் 5847 · சுந்தர 13.43

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிந்துராகத்தின் செறி துகில் கச்சொடு செறிய - சிவப்பு நிறம் செறிந்த ஆடை அரைக்கச்சுடனே கூடி விளங்க; பந்தி வெண்முத்தின் அணிகலன் முழு நிலா பரப்ப - வரிசையாகக் கோக்கப் பெற்ற முத்துக்களால் ஆகிய மாலை முதலிய ஆபரணங்கள் பூர்ண சந்திரனது நிலவைப் போன்ற ஒளியைப் பரவச் செய்ய, (அதனால்); அல்லு அந்தி வான் உடுத்து தாரகை இனம் பூண்டு இந்து வெண்குடை நீழலில் வீற்றிருந்தது ஆம் என்ன - இருளானது செவ்வானத்தை ஆடையாக உடுத்திக் கொண்டு, நட்சத்திரத்தின் கூட்டங்களை ஆபரணமாகத் தரித்து, சந்திரனாகிய வெண் கொற்றக் குடையின் நிழலிலே, கொலு வீற்றிருந்தது என்று சொல்லும்படியும்.

இராவணனது தோற்றம், இருளானது, செவ்வானத்தை ஆடையாக உடுத்தும், நட்சத்திரக் கூட்டங்களை ஆபரணமாகத் தரித்துக் கொண்டும், சந்திரனாகிய வெண்குடை நிழலில் ஓலக்கம் இருந்த காட்சி போன்று இருந்தது என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His close-woven vermilion garment bound tight with a sash,
  2. his ornaments of rows of white pearls spreading full moonlight,
  3. in the shade of the moon-white parasol, wearing hosts of stars,
  4. it was as if Night, clothed in the evening sky, sat enthroned.

What the poem says

A final image of Irāvaṇaṉ in state: in his red silk with its sash, decked in strings of white pearls and shaded by his white parasol, he looks like Night itself holding court, dressed in the red of the evening sky, wearing the stars as jewels, with the moon for a parasol.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cinturākattiṉ ceṟi tukil kaccoṭu ceṟiya
panti veṇ muttiṉ aṇikalaṉ muḻu nilāp parappa
intu veṇkuṭai nīḻalil tārakai iṉam pūṇṭu
anti vāṉ uṭuttu allu vīṟṟiruntatām eṉṉa.