கம்பராமாயணம் 5848 · சுந்தர 13.44

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வண்மைக்கும் - (குபேரசம்பத்தை வென்று பெற்றுள்ள) வளப்பத்துக்கும்; திருமறைகட்கும் - சிறந்த வேதங்கட்கும்; வானினும் பெரிய திண்மைக்கும் - ஆகாயத்தினும் பெரிய வலிமைக்கும்; தனி உறையுளான் - ஒப்பற்ற இருப்பிடமாய் உள்ள இராவணன்; முழுமுகம் திசையில் கண்வைக்கும் தொறும் - தனது பெரிய முகங்கள் பத்தையும் ஒரு மிக்க வைத்து, எல்லாத்திக்குகளிலும் நோக்கும் போதெல்லாம்; களிற்றொடு மாதிரம் காக்கும் எண்மர்க்கும் - யானைகளோடு அந்த அந்தத் திக்குகளைக் காக்கும் எண் திசைக்காவலர்கட்கும்; மற்றை இருவர்க்கும் - மற்றவையான மேலும் கீழும் இருந்து பாதுகாக்கின்ற (துருவன் ஆதிசேடன் என்னும்) இருவர்க்கும்; பெரும் பயம் எய்த - மிக்க அச்சம் தோன்றவும்.

இராவணன் பார்வைக்கு, எட்டுத்திக்குப் பாலகர்களும், வானைப் பாதுகாக்கும் துருவனும், நிலத்தைப் பாதுகாக்கும் ஆதிசேடனும் பயந்து கிடந்தனர் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who, for bounty, for the sacred Vedas, and for a strength greater than the sky,
  2. is the one sole abode, whenever, with all his faces, toward the quarters
  3. he turned his eyes, brought to the eight who guard the directions with their elephants
  4. and to the other two as well, great fear.

What the poem says

Irāvaṇaṉ is the one home of wealth, seized from Kubera, of Vedic learning and of a strength vaster than the sky.

Whenever he turns his ten faces toward the directions, the eight guardians of the quarters with their elephants are terrified, and so are the two guardians of above and below, Dhruva in the sky and Ātiśēṣaṉ beneath the earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇmaikkum tiru maṟaikaṭkum vāṉiṉum periya,
tiṇmaikkum taṉi uṟaiyuḷām muḻumukam ticaiyil,
kaṇvaikkum toṟum kaḷiṟṟoṭu mātiram kākkum,
eṇmarkkum maṟṟai iruvarkkum perumpayam iyaṟṟa.