கம்பராமாயணம் 585 · பால 10.33

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெம் களி விழிக்கு ஒரு விழவும் ஆய் அவர்,
கண்களில் காணவே களிப்பு நல்கலால்,
மங்கையர்க்கு இனியது ஓர் மருந்தும் ஆயவள்,
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம் கொல் ஓ.

பொருள் · Meaning in Tamil

வெங்களி விழிக்கு - (பார்க்கும் ஆடவர்களின் விரும்பத்தக்க களிப்பையுடைய கண்களுக்கு; ஒரு விழியும் ஆயவர் - சிறந்த ஒரு திருவிழாக் காட்சி போன்று உற்சாகம் தருகின்ற மகளிர்; கண்களில் காணவே - (தத்தம்) கண்களால் (தன்னைக்) காணுந்தோறும்; களிப்பு நல்கலால் - (அப் பெண்களுக்கும்) உள்ளக் களிப்பைத் தருவதால்; மங்கையர்க்கு - அம் மங்கையர்க்கெல்லாம்; இனியது ஓர் மருந்தும் - இனிய சுவையைத் தரக் கூடிய அமுதம் போன்ற; ஆயவள் - சீதையானவள்; இனி எங்கள் நாயகற்கு - இனிமேல் எங்கள் தலைவனான இராமனுக்கு; யாவது ஆம் கொலோ - எத்தகைய பொருளாவாளோ?

ஆடவர்களின் கண்களுக்குக் களிப்பு தருகின்ற பெண்களும் கூடச் சீதையின் அழகைக்கண்டு களிப்படைகின்றார்கள். அப்படியிருக்க ஆண்களில் அழகனாகிய இராமனுக்கு இவளது அழகு எத்தன்மையதாக இருக்குமோ? கனியான சீதை இங்கு அமுதமாகிறாள்; ஏனெனில் சீதை அமுதினும் இனியவள் ஆதலின்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those women are a festival to men's eager eyes;
  2. yet since she fills them with delight the moment their eyes behold her,
  3. she has become a sweet medicine even to those women —
  4. what then will she be, from now on, to our lord?

What the poem says

The poet steps into the story for a moment. The women around Cītai are themselves a feast for men's eyes, yet even they are thrilled just to look at her. If she is a sweet nectar to them, what will she be to "our lord," Irāmaṉ, the most handsome of men? The meeting of the two is about to happen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veṅ kaḷi viḻikku oru viḻavum āy avar,
kaṇkaḷiṉ kāṇavē kaḷippu nalkalāl,
maṅkaiyarkku iṉiyatu ōr maruntum āyavaḷ,
eṅkaḷ nāyakaṟku iṉi yāvatu āmkolō.