கம்பராமாயணம் 586 · பால 10.34

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குழைகளும் - காதணி முதலான சிறிய அணிகலன்களும்; இழைகளும் - (கழுத்தில் அணியும்) ஆரம் போன்ற பேரணிகலன்களும்; இன்ன - இத்தன்மையனவாம்; முன்னமே - (இச்சீதை) மண்ணில் பிறப்பதற்கு முன்பே; மழைபொரு கண் இணை - மழையொத்துக் குளிர்ந்த கண்களையுடைய; மடந்தைமாரொடும்- அழகிய பெண்களுடனே; பழகிய எனினும் - பழகியவையாக இருந்தாலும்; இப்பாவை தோன்றலால் - இந்தச் சீதை பிறந்ததனால்; அழகு எனும் அணியும் - பிறர்க்கு அழகு தரக்கூடிய அந்த அணிகலன்களும்; ஓர் அழகு பெற்றவே - புதியதோர் அழகினைப் பெற்றன.

அணி: பிறரால் அணியப்பட்டு அழகு செய்வதால் அணிகலன்களுக்கு 'அணி' என்று பெயர். அத்தகைய அணிகள் பிற பெண்களின் உடம்பில் அணியப் பெற்று அவர்களுக்கு அழகு தரும்; அவர்களால் தாம் அழகைப் பெறுவதில்லை. ஆனால், சீதையின் உடம்பில் இவை அணியப் பெற்றமையால் தாம் அழகைப் பெற்றன என்பது கருத்து. எனவே, அணிகளுக்கும் அழகு கொடுக்கக் கூடியது சீதையின் பேரழகு. 'ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள்' என்று திருமாலைச் சிறப்பித்துக் கூறுவதுண்டு. சிற்றணிகலம்: குழை முதலியன. பேரணிகலம்: ஆரம், மேகலை போல்வன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Jewels and earrings, and things like these, though long before
  2. they had been familiar with women whose two eyes rival the rain clouds,
  3. now that this doll-like maiden has appeared,
  4. even the things called ornaments have gained a beauty of their own.

What the poem says

Ornaments exist to make their wearers beautiful. Earrings, necklaces and girdles have adorned beautiful women since long before Cītai was born, and they gave those women beauty without receiving any back. On Cītai it is the other way round: the jewels take beauty from her. The commentary compares a traditional praise of Viṣṇu as "the Lord who lends beauty to his ornaments."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḻaikaḷum kuḻaikaḷum iṉṉa, muṉṉamē
maḻai poru kaṇ iṇai maṭantaimāroṭum
paḻakiya eṉiṉum, ip pāvai tōṉṟalāl,
aḻaku eṉum avaiyum, ōr aḻaku peṟṟatē.