கம்பராமாயணம் 587 · பால 10.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எண்ண அரு நலத்தினாள் - அழகின் எல்லை இதுதான் என மனத்தால் நினைப்பதற்கும் அரிய அழகுடைய சீதை; இனையள் நின்றுழி - இத் தன்மையுடையவளாய் நின்றபொழுது; கண்ணொடு - ஒருவர் கண்களோடு; கண்இணை - மற்றொருவர் கண்கள்; கவ்வி - கவர்ந்து பற்றிக்கொண்டு; ஒன்றை ஒன்று உண்ணவும் - ஒன்றை ஒன்று கவர்ந்து சுவைக்கவும்; உணர்வும் - இருவரது அறிவும்; நிலை பெறாது - (தம்தம் இடங்களில்) நிலைபெற்று இருக்காமல்; ஒன்றிட - (ஒன்றையொன்று கூடி) ஒன்றுபடவும்; அண்ணலும் நோக்கினான் - இராமனும் (சீதையைப்) பார்த்தான்; அவளும் நோக்கினாள் - சீதையும் (இராமனைப் பார்த்தாள்.
இராமனும் சீதையும்: இராமனது பார்வை சீதைமேல் செல்ல, அவள் கண் இராமன் மேல் பாய, அப்போது இருவரது மனவுணர்ச்சியும் ஒன்றுபட்டு ஒரு தன்மைத்தான காதலைக் கொண்டது புலனாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As she, of beauty beyond all thought, stood there thus,
- eye seized eye, each drinking in the other,
- and their minds, no longer staying in their places, became one;
- the noble one looked at her, and she looked at him.
What the poem says
This is the most famous line in Kampaṉ's Irāmāyaṇam: "aṇṇalum nōkkiṉāṉ, avaḷum nōkkiṉāḷ," "he looked, and she looked." In Vālmīki, Irāmaṉ and Cītai do not meet before the bow ordeal. Kampaṉ gives them a first sight of each other here, in the Tamil tradition of love at first sight (kaḷavu). Their eyes lock and feed on each other, and their separate minds leave their places and become one.