கம்பராமாயணம் 588 · பால 10.36

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நோக்கிய - (அவ்வாறு சீதை) பார்த்த; நோக்கு எனும் - பார்வையாகிய; நுதிகொள் வேல் இணை - கூரிய இரண்டு வேல்கள்; ஆக்கிய மதுகையான் - ஆக்கம் பெற்ற வன்மையுடைய இராமனின்; தோளின் ஆழ்ந்தன - தோள்களிலே அழுந்தின; வீக்கிய கணைகழல் - ஒலிக்கும் வீரக்கழல் கட்டிய; வீரன் செங்கணும் - வீரனான இராமனுடைய சிவந்த கண்களும்; தாக்கு அணங்கு - பிறரை வேட்கையால் தாக்குகின்ற மோகினியாகிய பெண் தெய்வத்தை; அனையவள் - போன்ற சீதையின்; தனத்தில் தைத்த - கொங்கைகளில் தாக்கின.

இராமன், சீதை ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் பருகினர். ஓர் ஆவிற்கு இரு கோடுபோல ஒத்த காதல் கொண்டவராயினர். 'கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல'- குறள்:1100

தாக்கணங்கு: பார்க்கின்ற ஆடவர்க்கு வேட்கையை விளைவித்து அதனால் அவர்களைத் தாக்கும் தேவதை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The pair of sharp spears that were her glances
  2. sank deep into the shoulders of him whose strength had grown full;
  3. and the red eyes of the hero with the tight-bound, ringing anklet
  4. pierced the breasts of her who was like a goddess who strikes with desire.

What the poem says

The exchange of looks is described as a duel. Cītai's glances are two sharp spears that sink into Irāmaṉ's mighty shoulders. Irāmaṉ's red eyes strike her breasts in return. She is likened to the tākkaṇaṅku, a goddess believed to strike men with longing. Their love is equal, "like the two horns of one cow." The commentary quotes the Tirukkuṟaḷ: when eyes meet eyes in agreement, words are of no use.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nōkkiya nōkku eṉum nuti koḷ vēl iṇai,
ākkiya matukaiyāṉ tōḷiṉ āḻntaṉa,
vīkkiya kaṉai kaḻal vīraṉ ceṅkaṇum,
tākku aṇaṅku aṉaiyavaḷ taṉattil taittavē.