கம்பராமாயணம் 5851 · சுந்தர 13.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நரம்பு கண் அகத்து உள் உறை நறை - நரம்புக் கருவியாகிய வீணை முதலிய இசைக்கருவிகளினிடத்து உள்ளே தங்கியுள்ள இசையாகிய தேனும்; நிறை பாண்டில் - இலக்கணம் நிறைந்த கஞ்சக் கருவியும்; நிரம்பு சில்லரி பாணியும் - நிரம்பிய சில்லரி என்னும் வாத்தியத்தாளமும்; குறடும் - குறடு என்னும் தாளக் கருவியும்; நின்று இசைப்ப - இடையறாது நிலை நின்று ஒலிக்கவும்; அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தால் அன்ன பாடல் - தேவமகளிர் அமிழ்தத்தைச் சிந்தினால் போன்ற வாய்ப்பாட்டினது; வரம்பு இல் இன்னிசை - அளவிறந்த இனிமையை உடைய இசையை; செவி தொறும் செவி தொறும் வழங்க - தனது இருபது காதுகளிலும் வந்து சொரியவும்.
நறை, பாண்டில், பாணி, குறடு என்பவை நின்று இசைப்ப, அரம்பை மங்கையர் பாடல் இசை செவி தொறும் செவி தொறும் வயங்க என்க. பாணி - கை; அதனால் வரையறுத்து இடப்படுகிற தாளத்துக்கு இலக்கணை. பாடல் இன்னிசை - வாய்ப்பாட்டின் இனிய கீதம்; நறை - இசைத்தேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The honey of music dwelling within the strings, the well-made cymbals,
- the full beat of the cillari and the kuṟaṭu sounding on and on,
- and singing, as if the celestial maidens were pouring out ambrosia,
- its boundless sweet melody flowing into ear after ear.
What the poem says
Music fills the hall: the "honey" of stringed instruments such as the vīṇā, bronze cymbals, the cillari and kuṟaṭu keeping time, and the songs of celestial women, as sweet as ambrosia.
It all pours into each of Irāvaṇaṉ's twenty ears.