கம்பராமாயணம் 5852 · சுந்தர 13.48

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பாணியின் கூடு - தாளத்தோடு கூடிய; இசையொடும் - பாட்டுடனும்; முழவொடும் - மத்தள ஒலியுடனும்; கூட - மாறுபடாது ஒத்துவருமாறு; தோடு ஒறு அடி - பூவிதழினும் மேம்பட்ட சிறிய பாதச் சதிவரிசை; விழி மனம் கையொடு தொடரும் - விழிப்பார்வை, அதிலேயே ஒன்றிய மனம், கையினால் காட்டும் அபிநயக் குறிகள் ஆகியவை ஒன்றாக அமைந்த; ஆடல் நோக்குறின் அரும் தவமுனிவர்க்கும் - நாட்டியத்தைப் பார்த்தால், அருமையான தவத்தைச் செய்கின்ற முனிவர்களும்; அமைந்த வீடு மீட்குறும் - (தமக்கு) உளதாகும் முத்தியின்பத்தைக் கைவிட்டு (தன்மேல்) மனம் திரும்பும் படிச் செய்கின்ற; மேனகை மேல் - மேனகை என்னும் தேவமாதின் மேல்; நகைவிளங்க - மகிழ்ச்சியால் சிரிப்புத் தோன்றவும்.

அருந்தவமுனிவரையும் தன் பால் இழுக்கும் வண்ணம் நாட்டியம் ஆடும் மேனகையைத் தன் அருகில் கண்டு மகிழ்ச்சியுடன் இருந்தான் இராவணன் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In step with the beat, with the song and with the drum,
  2. her petal-soft little feet, with eyes, mind and hands following together,
  3. in a dance which, if they watched it, would make even sages of hard penance
  4. give up the liberation they had won: on that Mēṉakai his smile shone.

What the poem says

The celestial dancer Mēṉakai performs before Irāvaṇaṉ. Her tiny feet keep perfect time with rhythm, song and drum, while her eyes, her absorbed mind and her expressive hand gestures move as one.

Her dancing could turn even ascetics away from the liberation they had earned, and Irāvaṇaṉ watches her with a pleased smile.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kūṭu pāṇiyiṉ icaiyoṭum muḻavoṭum kūṭa
tōṭu cīṟu aṭi viḻi maṉam kaiyoṭu toṭarum
āṭal nōkkuṟiṉ arun tava muṉivarkkum amainta
vīṭu mīṭkuṟum mēṉakai mēlnakai viḷaṅka.