கம்பராமாயணம் 5853 · சுந்தர 13.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஊடினார் முகத்து உறுநறை - தன்னுடன் ஊடலால் பிணக்கம் கொண்ட மாதர்களின் முகங்களினிடத்துத் தோன்றுகின்ற இன்பச்சுவையாகிய தேனை; ஒரு முகம் உண்ண - (தனது பத்து முகங்களில்) ஒரு முகம் நுகரவும்; கூடினார் முகம் - கூடின மகளிரது முகத்திலே; களி நறை - தோன்றுகின்ற களிப்பாகிய மதுவை; ஒரு முகம் குடிப்ப - (அவனுடைய) மற்றொரு முகம் பருகவும்; பாடினார் முகத்து ஆர் அமுது - இசை பாடின மகளிரது முகத்தில் தோன்றுகின்ற காதல் குறிப்பாகிய அருமையான அமுதத்தை; ஒரு முகம் பருக - ஒரு முகமானது அருந்தவும்; ஆடினார் முகத்து அணி அமுது - தன்முன் விருப்போடு ஆடிய மகளிர் முகத்தில் தோன்றும் அழகாகிய அமிர்தத்தை; ஒரு முகம் அருந்த - மற்றொரு முகமானது உண்ணவும்.
ஊடுதல், கூடுதல், பாடுதல், ஆடுதல் செய்யவும் மகளிர்களது காதற்குறிப்பை, அவர்கள் முகத்தில் கண்டு அனுபவித்து நின்றான் இராவணன் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- One face drinking the honey on the faces of women sulking in love,
- one face drinking the wine of joy on the faces of women in his embrace,
- one face drinking the rich nectar on the faces of women singing,
- one face tasting the lovely nectar on the faces of women dancing.
What the poem says
Kampaṉ now puts Irāvaṇaṉ's ten faces to work, each busy with something different.
In this verse four of them are given over to pleasure, each relishing the looks of a different group of women: those sulking in a lovers' quarrel, those in his arms, those singing and those dancing.