கம்பராமாயணம் 5854 · சுந்தர 13.50

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தேவரோடு இருந்து அரசியல் ஒருமுகம் செலுத்த
மூவரோடு மா மந்திரம் ஒருமுகம் முயலப்
பாவகாரிதன் பாவகம் ஒருமுகம் பயிலப்
பூவை சானகி உரு ஒடு உம் ஒருமுகம் பொருந்த.

பொருள் · Meaning in Tamil

ஒரு முகம் தேவரோடு இருந்து அரசியல் செலுத்த - ஒரு முகம் (தன் கீழ்க்குடிகளாகிய) தேவர்களுடன் கலந்து அரசாட்சி ஆணைகளைச் செலுத்தவும்; ஒரு முகம் மூவரோடு மாமந்திரம் முயல - மற்றொரு முகம், மந்திரி, சேனாபதி, அரசியல்தலைவர் என்ற மூவருடன் மாட்சியுற்ற மந்திராலோசனைகளில் முயன்றிருக்கவும்; ஒருமுகம் பாவகாரிதன் பாவகம் பயில - மற்றொரு முகம், தீவினை செய்பவனான அவனுடைய நினைவுகளைச் சிந்தனை செய்யவும்; ஒரு முகம் பூவை சானகி உருவெளி பொருந்த - மற்றொரு முகம், கிளி போன்றவளான பிராட்டியின் உருவெளித் தோற்றத்தில் பொருந்தி நிற்கவும்.

இராவணனது முகங்களின் செயல்பாடுகள் கூறப்பட்டன. பாவகாரி - தீவினை; “பாவ காரிகளைப் படைத்தவன்” (பெரியாழ் 5 திருமொழி - 4.1)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. One face, seated with the gods, conducting the affairs of state,
  2. one face labouring at high counsel with the three,
  3. one face brooding on the thoughts of the sinner he was,
  4. one face fixed on the phantom image of Cāṉaki, sweet as a parrot.

What the poem says

Four more faces: one governs, issuing orders to the gods who are now his subjects; one deliberates with his three chief advisers, the minister, the commander and the head of state affairs; one broods on his own wicked schemes; and one is lost in an imagined vision of Cītai, Cāṉaki, whose form seems to hover before his eyes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvarōṭu iruntu araciyal orumukam celutta
mūvarōṭu mā mantiram orumukam muyala
pāvakāritaṉ pāvakam orumukam payila
pūvai cāṉaki uruveḷi orumukam porunta.