கம்பராமாயணம் 5855 · சுந்தர 13.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஒரு முகம் - இராவணனுடைய மற்றொரு முகம்; காந்தள் மெல்விரல் சனகிதன் கற்பு எனும் கடலை - செங்காந்தள் மலர் போன்ற மென்மையான விரல்களை உடைய சீதையின் கற்பு என்ற கடலை; நீந்தி ஏறுவது எங்ஙன் என்று நினைய - நீந்திக் கரை ஏறுவது எவ்வாறு என்று நினைத்து ஏக்கமுறவும்; ஒரு முகம் - மற்றொருமுகம்; சாந்து அளாவிய கொங்கை நன் மகளிர் - சந்தனம் பூசிய கொங்கைகளை உடைய அழகிய மாதர்கள் பலர்; தன் சூழ்ந்தார் ஏந்தும் ஆடியின் - தன்னைச் சூழ்ந்து கொண்டு கையில் தாங்கிக் காட்டுகின்ற கண்ணாடியில்; எழிலினை நோக்க - தனது அழகினைப் பார்க்கவும்.
“கற்பெனும் கடலை நீந்தி ஏறுவது” என்றது உருவகம். சீதையை அபகரித்து வருவதற்குக் கருங்கடலைக் கடந்தது எளிதாயிற்று; ஆனால், சீதையின் கற்புக் கடலைக் கடப்பது அரிது என்பது உணர்த்தப்பட்டது. இராவணன், பிராட்டியின் மேனியைக் கொணர்ந்து வரலாம்; ஆனால் அவளது ஆன்ம குணங்களை வசப்படுத்த முடியாது என்பது குறிப்பு. பிராட்டியை வசப்படுத்தற்கேற்ற அழகு, தனக்கு இருக்கிறதா என்று ஒருமுகம், மகளிர் ஏந்திய கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தது என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- One face pondering, "How am I to swim across and climb out of the sea
- that is the chastity of Caṉaki, with fingers soft as kāntaḷ flowers?"
- one face, in the mirrors that lovely women, breasts smeared with sandal, standing round him,
- held up, gazing at its own beauty.
What the poem says
The last two faces. One wonders how it could ever swim across the ocean of Cītai's chastity. He crossed the real sea easily enough to abduct her, but this sea has no far shore: he could carry off her body, but never win her heart.
The other studies itself in the mirrors held up by his women, checking whether its looks are good enough to win her.