கம்பராமாயணம் 5856 · சுந்தர 13.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொதும்பர் வைகு தேன் - மரச் செறிவினிடத்து உள்ள தேனை; புக்கு அருந்துதற்கு - அங்குப் புகுந்து குடிப்பதற்கு; அகம்புலரும் - (முடியாமல்) மனம் வாடுகிற; மதம் பெய் வண்டு என - களிப்பு மிக்கதொரு வண்டு போல; சனகி மேல் மனம் செல - பிராட்டியினிடத்துத் தன் மனம் போக, (அதனை உணர்ந்து); மறுகி வெதும்புவார் - துன்பமுற்று மனம் வாடுபவர்களும்; அகம் வெந்து அழிவார் - மனம் புழுங்கி மிகவும் வருந்துபவர்களும்; விழி நீர் நகில் ததும்புவார் - (தமது) கண்களினின்று நீர் ததும்பித் தம் கொங்கைகளிடத்து வழியப் பெற்றவர்களுமான இராவணனுடைய காதல் மகளிரது; விழி தாரை வேல் - கண்களின் வரிசையாகிய வேல்கள்; தோள் தொறும் தாக்க - தனது இருபது தோள்களிலும் வலிந்து பாயவும். மரச் செறிவில் உள்ள தேனை வண்டு அருந்தமுடியாது. அது போன்று அசோகவனத்துப் பிராட்டியை இராவணன் அணுகமுடியாது என்பது கருத்து. இராவணன் மனம் சீதைபால்; அதனால், அவனது காதல் மகளிர்களது கண் பார்வை அவன் தோள்களில் மட்டும் நின்றது என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As, like a bee whose heart withers, unable to get in and drink the honey hidden in the thicket,
- a bee maddened with desire, his mind went out to Caṉaki, those who, distressed,
- smouldered, who burned within and wasted away, on whose breasts the tears from their eyes
- brimmed over, struck at each of his shoulders with the spears that were their streaming glances.
What the poem says
Irāvaṇaṉ's mind keeps straying to Cītai, like a frenzied bee pining for honey hidden deep in a thicket where it cannot reach. Cītai, guarded in the grove, is just as far beyond him.
His consorts sense it. Burning with jealousy and weeping, they cast glances at him like spears, but those glances can only strike his shoulders; his heart is elsewhere.