கம்பராமாயணம் 5857 · சுந்தர 13.53
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மகரந்த நறவு உண்டு - (மலர்களில் உள்ள) மகரந்தப் பொடிகளுடன் கலந்த தேனைப் பருகி; மகளிர் வீறு அளாவிய - மகளிர்களுடைய செருக்குற்று விளங்கும்; முகிழ் முலை மெழுகிய சாந்தின் - அரும்பு போன்ற கொங்கைகளில் பூசப்பெற்ற சந்தனத்தின்; சேறு அளாவிய சிறு நறும் சீகரம் தென்றல் - சேற்றிலே கூடிக்கலந்த இளமையும் மணமும் குளிர்ச்சியும் உடைய தென்றல் காற்று; மாறு அளாவிய - (இராவணனுக்குத் தான்) எதிர் செய்யுமாறு பகைமை கொண்டு; ஊறு அளாவிய கடு என - துன்பம் கலந்த விடம் போல; உடலிடை நுழைய - அவனது உடம்பிலே நுழைந்து வருத்தவும்.
சிறு, நறும், சீகரம் தென்றல், நறவு உண்டு, சாந்தின் சேறு அளாவி, இராவணனின் உடம்பில் விடம் போல நுழைந்து வருத்தியது என்க. இராவணனது ஆணைக்கு அஞ்சி முன்பு இலங்கை நகருள் புகமுடியாதிருந்த காற்று (கறங்கு கால்புகா) இப்போது, சிறு வடிவில் (தென்றல்) பக்க பலத்துடன் புகுந்து அவன் உடலையே பகைமை உணர்வுடன் வாட்டியது, என்ற நயம் உணரத்தக்கது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having drunk the nectar laden with pollen, in hostility,
- mingling with the mire of sandal paste smeared on the proud, bud-like breasts of women,
- the small, fragrant southern breeze, cool with spray,
- slipped into his body like a poison laced with pain.
What the poem says
The gentle southern breeze, sweetened by flower nectar and the sandal paste on the women's breasts, is a classic stimulus of desire. To the lovesick Irāvaṇaṉ it feels like poison seeping into his body.
The commentary sees a fine irony here. The wind, which once did not dare enter Ilaṅkai for fear of Irāvaṇaṉ, now creeps in as a soft little breeze and torments him like an enemy.