கம்பராமாயணம் 5858 · சுந்தர 13.54

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திங்கள் வாள்நுதல் மடந்தையர் சேயரி கிடந்த
அம் கயல் தடம் தாமரைக்கு அலரியோன் ஆகி
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியாப்
பொங்கு கைகளாம் தாமரைக்கு இந்துவே போன்று.

பொருள் · Meaning in Tamil

திங்கள் வாள்நுதல் மடந்தையர் - பிறைச்சந்திரன் போன்ற ஒளி பொருந்திய நெற்றியை உடைய மகளிரது; சேய் அரி கிடந்த - சிவந்த இரேகைகள் பரவிக் கிடந்த; அம் கயம் தடம் தாமரைக்கு - அழகிய தடாகத்தில் உள்ள பெரிய தாமரை மலர் போன்ற முகங்களுக்கு; அலரியோன் ஆகி - சூரியனைப் போல மகிழ்ச்சியை உண்டாக்கியும்; வெம் கண் வானவர் தானவர் என்று இவர் - பகைவரான தேவர்கள் அசுரர்கள் என்று சொல்லும் இவர்களுடைய; விரியா பொங்கு கைகள் ஆம் தாமரைக்கு - விரிந்து மலராத விளங்கும் கைகளாகிய தாமரை மலர்களுக்கு; இந்துவே போன்று - சந்திரனே போல விளங்கவும்.

இராவணன் தன் காதல் மகளிர் முகங்களாகிய தாமரை மலர்களுக்குச் சூரியன் போன்றும், தன் பகைவர்களான வானவர் தானவர்களுடைய கைகளாகிய தாமரைகளுக்குச் சந்திரன் போன்றும் விளங்கினான் என்பதாம். இராவணன் தோற்றம் காதல் மகளிர் முகங்களை மலர வைத்தது. பகைவராகிய தேவர் அசுரர்களைக் குவியவைத்தது. முகமும் தாமரை; கைகளும் தாமரை. ஒரே சமயத்தில் ஒன்று மலரவும் ஒன்று குவியவும் செய்ததால், இராவணன் சூரியனாகவும் சந்திரனாகவும் விளங்கினான் என்ற நயம் உணர்ந்து இன்புறத்தக்கது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To the faces of women with brows bright as the crescent moon, red-streaked,
  2. great lotuses in a lovely pool, he was the sun;
  3. but to the fierce-eyed gods and dānavas, to these,
  4. to the lotuses of their raised hands that would not open, he was like the moon.

What the poem says

The last of the throne-room verses turns on a double image. Lotuses open in sunlight and close by moonlight.

To the lotus faces of his women Irāvaṇaṉ is the sun, making them bloom with joy; to the hands of the gods and asuras, folded shut in fearful salutation like closed lotuses, he is the moon. He is sun and moon at the same moment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiṅkaḷ vāḷnutal maṭantaiyar cēyari kiṭanta
am kayat taṭan tāmaraikku alariyōṉ āki
veṅ kaṇ vāṉavar tāṉavar eṉṟu ivar viriyāp
poṅku kaikaḷ ām tāmaraikku intuvē pōṉṟu.