கம்பராமாயணம் 5859 · சுந்தர 13.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இருந்த எண்திசைக் கிழவனை - இவ்வாறு வீற்றிருந்த எட்டுத் திக்குகளுக்கும் தலைவனான இராவணனை; மாருதி எதிர்ந்தான் - அனுமன் தன் எதிரே கண்டான்; கருந்திண் நாகத்தை நோக்கிய கலுழனின் - (கண்டதும்) கரிய வலிய பாம்பைக் கண்ட கருடன் போல; கனன்றான் “திருந்து தோளிடை வீக்கிய பாசத்தைச் சிந்தி - மனம் கொதித்தவனாய், “சிறந்து விளங்கும் என்னுடைய தோள்களில் கட்டியிருக்கிற பிரமாத்திரத்தைச் சிதறடித்து; உருந்து நஞ்சு போல்பவன் வயின் பாய்வென் என்று உடன்றான் - கோபித்து, விடம் போன்றவனான இந்த இராவணன் மேல் இப்போது பாய்கின்றேன்” என்று உக்கிரங் கொண்டான்.
இராவணனைக் கண்டதும், அனுமன் எண்ணிய எண்ணம் கூறப்பட்டது. உருத்து - உருந்து; எதுகை நோக்கி மெலிந்தது. இராவணனுக்குக் கருநாகமும், அனுமனுக்குக் கருடனும் உவமைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Māruti came face to face with the lord of the eight directions seated there;
- he blazed up like Kaluḻaṉ catching sight of a strong black serpent;
- "Scattering the noose bound tight about my fine shoulders,
- I will leap on him who is like fierce poison," he raged.
What the poem says
Brought before Irāvaṇaṉ, Aṉumaṉ flares up like Garuḍa at the sight of a black cobra. His first impulse is to burst the bonds on his shoulders and spring at the poisonous demon king.