கம்பராமாயணம் 5860 · சுந்தர 13.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உறங்குகின்ற போது உயிர் உண்டல் குற்றம் என்று ஒழிந்தேன் - தூங்கும்போது ஒருவன் உயிரைப் போக்குதல் பழிக்கு இடமாகும், என்று எண்ணி, (முன்பு இவனைக் கொல்லாது) விட்டிட்டேன்; பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன் - (இப்போது) இவன் விளங்கும் பொன்னாலும் மணியாலும் ஆன சிம்மாசனத்தில் வீற்றிருக்கவும் காணப்பெற்றேன்; பல திறங்கள் சிந்திப்பது என்? - (இனி) பலவகையாக ஆலோசிப்பதற்கு என்ன இருக்கிறது?; இவன் தலை சிதறி - (இப்பொழுதே) இவன் தலைகளைச் சிதறி விழச் செய்து; அறம் கொள் கொம்பினை மீட்டு - அறத்திற்கு ஒரு பற்றுக்கோடு போல விளங்கும் பூங்கொம்பு போன்றவளான பிராட்டியை சிறையினின்று மீட்டுக் கொண்டு; உடன் அகல்வென் என்று அமைந்தான் - விரைவில் மீண்டு செல்வேன் என்று அனுமன் உறுதி செய்து கொண்டான்.
அனுமனின் உறுதி கூறப்பட்டது. கொம்பு; உவமை ஆகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "I held back, thinking it wrong to take a life while he slept;
- now I have found him seated on a shining throne of gold and gems;
- why weigh many courses? I will scatter his heads,
- rescue the slender branch that clings to Dharma, and be gone at once," he resolved.
What the poem says
Aṉumaṉ remembers that when he first searched the palace he found Irāvaṇaṉ asleep and spared him, because killing a sleeping man is shameful. Now the king is awake on his throne, so there is nothing to hold him back.
He resolves to smash Irāvaṇaṉ's heads, free Cītai, the flowering branch on which righteousness leans, and leave.