கம்பராமாயணம் 5861 · சுந்தர 13.57

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தேவர் தானவர் முதலினர் சேவகன் தேவி
காவல் கண்டு இவண் இருந்தவர் கண் புலன் கதுவப்
பாவகாரிதன் முடி தலை பறித்திலென் என்றால்
ஏவதாம் இனிமேல் செயும் ஆள்வினை?'என்றான்.

பொருள் · Meaning in Tamil

சேவகன் தேவி காவல் கண்டு - சிறந்த வீரனான இராமபிரானுடைய தேவியாகிய சீதா பிராட்டி சிறைக்காவலில் வைக்கப் பெற்றிருக்கக் கண்டும், (மீட்பதற்கு ஆற்றல் இன்றி); இவண் இருந்தவர் - இங்கு வாளா பார்த்துக் கொண்டிருந்தவர்களான; தேவர் தானவர் முதலினர் - தேவர்கள், அசுரர்கள் முதலினோருடைய; கண்புலன் கதுவ - கண்களுக்கு நன்றாகத் தெரியுமாறு; பாவகாரிதன் முடித்தலை யான் பறித்திலென் என்றால் - பாவியின் முடிகள் அணிந்த பத்துத் தலைகளையும் நான் இப்போதே பறித்து எறியேன் என்றால்; இனிமேல் செய்யும் ஆள்வினை ஏவது? - இனிமேல் செய்யும் அடிமைத் தொழில் யாது உள்ளது? (எதுவும் இல்லை என்றபடி); என்றான் - என்று வினவிக் கொண்டான்.

“பிராட்டியை வஞ்சனையால் கவர்ந்து வந்து சிறைவைத்த பாவகாரியின் (இராவணனின்) தலைகளைப் பறித்து எறிவதனினும் மேலாக மெய்யடியான் செய்யத்தக்க உறு தொழிலும் உளதோ?” என்று அனுமன் தனக்குள் வினவிக் கொண்டான் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "While the gods, the dānavas and the rest, who saw the guard set on the hero's queen
  2. and sat here doing nothing, look on with their own eyes,
  3. if I do not tear off the crowned heads of this sinner,
  4. what service is left for me to do hereafter?" he said.

What the poem says

Aṉumaṉ goes on arguing with himself. The gods and asuras in this court have watched Irāmaṉ's wife held prisoner and done nothing.

If he does not tear off the sinner's heads right here, in front of them all, what greater service could a true servant of Irāmaṉ ever perform?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tēvar tāṉavar mutaliṉar cēvakaṉ tēvi
kāval kaṇṭu ivaṇ iruntavar kaṇ pulaṉ katuva
pāvakāritaṉ muṭit talai paṟittileṉ eṉṟāl
ēvatu yāṉ iṉimēl ceyum āḷviṉai?'eṉṟāṉ.