கம்பராமாயணம் 5862 · சுந்தர 13.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தேடி வந்தது ஓர் குரங்கு - சீதையைத் தேடிக்கொண்டு வந்ததாகிய ஒரு குரங்கு; மாடு இருந்த இவன் புணர் மங்கையர் - இவ்விராவணன் அருகில் இருப்பவர்களும், இவன் சேரத்தக்கவர்களுமான மகளிர்கள்; மயங்கி ஊடு - திகைத்து உள்ளே ஓடிப்போம்படி; முடித்தலை திசை தொறும் உருட்டி - கிரீடம் அணிந்த இவனது தலைகளைப் பலதிக்குகளிலும் உருளச் செய்து; ஆடல் கொண்டு நின்று - வெற்றி கொண்டு (தான் சிறிதும் அழிவுறாது) நிலை பெற்று நின்று; ஆர்க்கின்றது - ஆரவாரஞ் செய்கின்றது; அது அம்மா கொடிது - அந்தக் குரங்கு அந்தோ! மிகவும் கொடியது; எனும் வாசகம் - என்று எல்லோரும் சொல்லும் புகழ் வார்த்தையைப் பெறுதல்; சிறிதோ? - சிறியதாகுமோ? (அன்று மிகப் பெரிது என்றபடி).
“நான் நினைக்கிறபடி செய்து முடிப்பேனானால், என்னை உலகத்தார் புகழ்வர். அதுவே எனக்குப் பெருமை தருவதாகும்” எனக் கருதினான் அனுமன் என்பதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "'While the women he takes to bed, who sat beside him, in panic
- fled inside, it sent his crowned heads rolling in every direction
- and stood there triumphant, roaring; how fierce it was, alas,
- a monkey that came searching!' Is such a saying a small thing?"
What the poem says
Aṉumaṉ pictures the fame he would win. People everywhere would say: a single monkey who came looking for Cītai sent the king's crowned heads rolling while his women ran screaming, and stood roaring in triumph. What a terrible monkey!
To be spoken of like that, he thinks, would be no small glory.