கம்பராமாயணம் 5864 · சுந்தர 13.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்று - என்று இவ்வாறு எண்ணி; தோள் இடை இறுக்கிய பாசம் இற்று ஏக - தன் தோள்களில் கட்டியிருக்கிற நாகபாசம் அறுந்து ஒழியும்படி; குன்றின் மேல் எழு கோள் அரி ஏறு என - மலையின் மேல் தாவ எழும்பும் வலிய ஆண்சிங்கம் போல; குதியில் சென்று கூடுவல் என்பது சிந்தனை செய்யாநின்று - ஒரு பாய்ச்சலில் சென்று அவனிடம் சேர்வேன் என்று எண்ணி, பிறகு ஆலோசித்து நின்று; “காரியம் அன்று” என நீதியின் நினைந்தான் - “இது நான் செய்யத்தக்க நல்ல காரியம் அன்று” என்று அனுமன் நீதியை ஒட்டிக் கருதுவானாயினான்.
வலிய பெரிய இராவணனுக்கு, அவன் மேல் பாய எண்ணும் அனுமனுக்கு, அரி ஏறும் உவமைகளாக வந்தன. தான் செய்த ஆலோசனைகள் தன் ஆற்றலுக்கு ஏற்றவையாயினும், இராம தூதனாகச் செயல் படுவதற்கு அது பொருத்தம் அன்று என கண நேரத்தில் அனுமன் மாறி எண்ணத் தொடங்கினான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thinking this, so that the noose tightened on his shoulders would snap and fall away,
- like a mighty lion springing up onto a hill,
- he was on the point of leaping at him in a single bound; but he paused, reflecting,
- and, guided by right judgment, decided, "This is not the thing to do."
What the poem says
Aṉumaṉ is about to snap his bonds and pounce on Irāvaṇaṉ like a lion leaping onto a mountain: the mountain is the vast demon king, the lion Aṉumaṉ.
At the last moment he stops and thinks again. Such an attack would suit his strength, but it is not right for someone who has come as Irāmaṉ's envoy.