கம்பராமாயணம் 5865 · சுந்தர 13.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கொல்லல் ஆம் வலத்தனும் அல்லன் - (இவன்) யாராலும் எளிதில் கொல்லக் கூடிய வலிமை உடையவனும் அல்லன்; கொற்றமும் - இவனது படைப் பெருக்கை நோக்குமிடத்து; வெல்லல் ஆம் தரத்தனும் அல்லன் - எவராலும் வெல்லத்தக்க நிலைமை உடையவனும் அல்லன்; மேலை நாள் - பழங்காலமுதல்; அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை - இருள் முழுதும் ஒருங்கு கூடினாற் போன்ற கருநிறம் உடையவனான இராவணனது (வளர்ந்து வந்துள்ள) வலிமையை; இராமனால் வெல்லல் ஆம் - இராமபிரான் ஒருவனால்தான் வெல்லுதல் கூடும்; பிறரும் வெல்வரோ? - வேறு யாரேனும் இவனை வெல்வார்களோ? (மாட்டார் என்றபடி).
இராவணன், இராமபிரானால் அன்றி, வேறு யாராலும் கொல்லப் படவோ, வெல்லப்படவோ முடியாதவன் என அனுமன் உணர்ந்தான் என்பது கருத்து. கொற்றம் - படைப் பெருக்கு. “நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்” (சீவக. 201)
ஆங்கிலம் · English translationAI
Translation
- "He is not one of a strength that can be killed, nor, given his armies,
- of a rank that can be overcome; the might
- of him whose colour is all the darkness of night massed together, built up since ancient days,
- Irāmaṉ alone can conquer; could anyone else conquer him?"
What the poem says
On reflection Aṉumaṉ sees that Irāvaṇaṉ, with his vast armies and a power built up over ages, cannot easily be killed or defeated by anyone. Only Irāmaṉ can overcome him.