கம்பராமாயணம் 5866 · சுந்தர 13.62
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்னையும் இவனுக்கு வெலற்கு அரிது - என்னை வெல்லுதலும் இந்த இராவணனுக்கு அரியதாகும் (முடியாது); ஈண்டு - இவன் முன்னிலையில்; இவன் தன்னையும் வெலற்கு எனக்கு அரிது - இவ்வளவு துணைவலிமை உடைய இவனை வெல்லுதலும் எனக்கும் அரியதாகும் (முடியாது) (ஆகவே); தாக்கினால் - இவனை எதிர்த்துப் போர் தொடங்கினால்; காலங்கள் அன்னவே கழியும் - பலகாலங்கள் அத்தாக்குதலாகவே கழிந்து விடும்; ஆதலால் - ஆகையால்; துன்ன அரும் செரு தொழில் தொடங்கல் தூயதோ? - பிறர் நெருங்குதற்கு அரிய போர்த்தொழிலைத் தொடங்குவது நல்லதோ? (அன்று என்றபடி). போர்த்தொழில் தொடங்குதல் தூயது அன்று என்ற முடிவுக்கு வந்தான் அனுமன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "It is hard for him to defeat me, and here, hard
- for me to defeat him; if we fought,
- whole ages would pass in just that way; therefore,
- would it be right to start a war no one could get near?"
What the poem says
Aṉumaṉ weighs the odds coolly. Irāvaṇaṉ could not beat him, but with all his support around him Aṉumaṉ could not beat Irāvaṇaṉ here either. A duel between them would drag on for ages.
So it would be unwise to start such a fight, and he decides against it.