கம்பராமாயணம் 5867 · சுந்தர 13.63

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஏழு பேர் உலகங்கள் யாவும் இன்பு உறப்
பாழி வன் புயங்கேளாடு அரக்கன் பல் தலை
பூழியில் புரட்டல் என் பூணிப்பாம்'என
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால்.

பொருள் · Meaning in Tamil

ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற - பூமி முதல் மேலே உயர்ந்துள்ள ஏழு உலக மக்களும் இன்பம் அடையும் படி; அரக்கன் பாழிவன் புயங்களோடு பல்தலை பூழியில் புரட்டல் - இராவணனுடைய பெரிய வலிய தோள்களையும், பலவான பத்துத் தலைகளையும் புழுதியில் புரளும்படி வெட்டித்தள்ளுதல்; என் பூணிப்பு ஆம் - நான் மேற்கொண்ட விரதமாகும்; என - என்று; ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டு - இராமபிரான் சொல்லியுள்ள சபத உரையும் ஒன்று உள்ளது.

ஏழ் உயர் உலகம் - பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம், மக லோகம், சன லோகம், தவலோகம், சத்திய லோகம். பூணிப்பு - விரதம்; ஊழியான் - காலத்திற்குத் தலைவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "'That all the seven high worlds may rejoice,
  2. to roll the demon's many heads, with his mighty, massive arms,
  3. in the dust is my vow': these words
  4. the Lord of the ages has spoken too."

What the poem says

There is another reason to hold back. Irāmaṉ, the Lord of time, has taken a vow that he himself will roll Irāvaṇaṉ's heads and arms in the dust, to the joy of the seven worlds. If Aṉumaṉ killed Irāvaṇaṉ now, he would make his master's vow void.

The seven worlds are listed by the commentary, from the earth, bhūlōka, up to Satyalōka.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ēḻ uyar ulakaṅkaḷ yāvum iṉpuṟa
pāḻi vaṉ puyaṅkaḷōṭu arakkaṉ pal talai
pūḻiyil puraṭṭal eṉ pūṇippu ām'eṉa
ūḻiyāṉ viḷampiya uraiyum oṉṟu uṇṭāl.