கம்பராமாயணம் 5868 · சுந்தர 13.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பொங்கு வெம்செருவிடை பொழுது போக்கினால் - மிகக் கொடிய போரிலே நான் தலையிட்டுக் காலத்தை இங்குக் கழித்துக்கொண்டிருந்தால்; இங்கு ஒரு திங்களே யான் இருப்பல் - “இந்த இலங்கையில் இன்னும் ஒரு மாத கால அளவே நான் உயிர் வைத்துக் கொண்டிருப்பேன்” என்று; அம் கண் நாயகன் தனது ஆணை கூறிய - அழகிய திருக்கண்களை உடைய தனது கணவனான இராமபிரான் மீது ஆணை வைத்துச் சொன்ன; மங்கையும் மன் உயிர் துறத்தல் வாய்மை ஆல் - சீதா பிராட்டியும், (தன்னை மீட்க இராமபிரான் வராமை கண்டு) தன்னிடம் பொருந்திய உயிரைத் துறந்து விடுதல் உறுதியாகும்.
“தன் நாயகன்மேல் ஆணையிட்டுக் கூறியதால், பிராட்டி மன் உயிர் துறத்தல் வாய்மையால்” என்று அனுமன் நினைத்தான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "'I shall remain here one month more, and no longer,'
- swore the lady, by her lord of lovely eyes;
- and she will surely give up her sweet life
- if I spend the time in fierce, raging battle."
What the poem says
The deciding reason. Cītai has sworn by Irāmaṉ that she will keep herself alive in Ilaṅkai for only one more month.
If Aṉumaṉ gets bogged down in a long fight here, the month will run out before Irāmaṉ can come, and she will certainly keep her word and die.