கம்பராமாயணம் 5870 · சுந்தர 13.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கடலின் ஆர் அமுது ஊட்டிய உம்பரை - பாற்கடலினின்றும் தோன்றிய அரிய அமுதத்தினை உண்டு சாவா வரம் பெற்ற தேவர்களையும்; உலைய ஓட்டினான் - வருந்துமாறு (போரில்) புறங்காட்டி ஓடச் செய்து வென்றவனான இந்திரசித்து; தட்டிய வாள் என தெறு கண் தேவியர் - கூர்மையாகத் தீட்டப் பெற்ற வாளாயுதம் போல ஆடவரது நெஞ்சுறுதியை அழிக்க வல்ல கண்களை உடைய உரிமைமகளிர்; ஈட்டிய குழு இடை - ஒன்று சேர்ந்திருந்த கூட்டத்தின் நடுவில்; இருந்த வேந்தற்கு - வீற்றிருந்த அரசனாகிய இராவணனுக்கு; அனுமனைக் காட்டினான் - அனுமனைக் காண்பித்தான். (அறிமுகப்படுத்தினான்)
தூது வந்து நகரை அழிவு செய்தவனை அரசாங்க முறையில் வைத்து ஆராயும் கருத்தினனாய் இராவணன் தன் தேவியர்களுடன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான். அப்போது, இந்திரசித்து, குற்றவாளியைக் கொண்டு போய் நிறுத்தியது போல, அனுமனை இராவணனுக்குக் காண்பித்தான் என்க. ஈட்டிய, ஊட்டிய என்பன இங்கு தன் வினைப் பொருளில் வந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Amid queens whose eyes wound like whetted swords,
- seated in their gathered throng, to the king
- he showed Aṉumaṉ, he who had driven the gods, fed on the precious nectar of the sea,
- to rout and ruin.
What the poem says
Irāvaṇaṉ sits in state among his queens, whose eyes cut like sharpened swords, ready to try formally the intruder who wrecked his city.
Intiracittu, who once routed even the immortal gods, presents Aṉumaṉ before him like a prisoner brought to court.