கம்பராமாயணம் 5871 · சுந்தர 13.67

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புவனம் எத்தனை? அவை அனைத்தும் போர் கடந்
தவனை'உற்று அரி உரு ஆன ஆண்தகை
சிவன் எனச் செங்கணான் என்னச் செய்தவன்
இவன்'எனக் கூறி நின்று இருகை கூப்பினான்.

பொருள் · Meaning in Tamil

புவனம் எத்தனை அவை - உலகங்கள் எத்தனை உண்டோ அவை; அனைத்தும் போர் கடந்தவனை உற்று - எல்லாவற்றையும் போரில் வென்றவனாகிய இராவணனை (இந்திரசித்து) அடைந்து; அரி உருவான ஆண்தகை இவன் - குரங்கு வடிவில் உள்ள ஆண்மைக்குணமுடையவனான இவன்; சிவன் என செங்கணான் என - சிவபிரான் போலவும் திருமால் போலவும்; செய்சேவகன் - போர் செய்த சிறந்த வீரன்; என கூறி - என்று எடுத்துச் சொல்லி; நின்று - எதிரே நின்று; இருகை கூப்பினான் - இரண்டு கைகளையும் குவித்து வணங்கினான்.

இந்திரசித்து அனுமனை இராவணனுக்கு அறிமுகப்படுத்திய முறை கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Coming before him who had conquered in war every world
  2. there is, he said, "This manly one in the shape of a monkey
  3. is a hero who fought like Civaṉ, like the red-eyed Lord;
  4. this is he," and stood with both hands joined.

What the poem says

Intiracittu introduces the prisoner to his father, conqueror of every world, with a warrior's honesty. This manly creature in monkey form, he says, fought like Śiva, like Viṣṇu.

Then he stands before Irāvaṇaṉ with his palms joined in respect.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puvaṉam ettaṉai? avai aṉaittum pōr kaṭan
tavaṉai'uṟṟu ari uruvāṉa āṇtakai
civaṉ eṉac ceṅkaṇāṉ eṉac cey cēvakaṉ
ivaṉ'eṉak kūṟi niṉṟu irukai kūppiṉāṉ.