கம்பராமாயணம் 5872 · சுந்தர 13.68
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நோக்கிய கண்களால் - (சினத்தோடு) பார்த்த (இராவணனது) கண்களினின்றும் உண்டான; நொறில் கனல் பொறி - விரைந்து சென்ற நெருப்புப் பொறிகள்; தூக்கிய அனுமன் மெய்மயிர் - (இந்திரசித்தால்) சிறப்பாகப் பேசப் பெற்ற அனுமனது உடலில் உள்ள உரோமங்கள்; சுறு கொள - சுறு சுறு என்று எரிந்து கருகும்படி; தாக்கிய - அனுமனை மோதிய; உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம்புகை - இராவணனது பெருமூச்சுக்களோடு தழுவிச் சென்ற வெவ்விய அனல் புகைகள்; அவன் உடல் விசித்த பாம்பின் வீக்கின - அந்த அனுமன் உடம்பைப் பிணித்திருந்த நாகபாசத்தைப் போலக் கட்டின.
இராவணனது பெருஞ்சினக்குறிப்பின் கடுமையும் வேகமும் கூறப்பட்டது என்க. நொறில் - வேகம்; வீக்குதல் - கட்டுதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From the eyes with which he glared, swift sparks of fire
- singed the hair on the body of Aṉumaṉ, who had been so praised,
- and the hot smoke curling out with the breaths that struck him
- bound that body like the serpent coiled about it.
What the poem says
Irāvaṇaṉ glares at Aṉumaṉ, whom his son has just praised so highly, with such fury that sparks fly from his eyes and singe the monkey's fur.
The smoke of his angry breathing coils round Aṉumaṉ like a second serpent noose.