கம்பராமாயணம் 5873 · சுந்தர 13.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கூற்றின் தன்மையான் - யமன் போன்ற கொடுந்தன்மை உடையவனான இராவணன்; அன்ன ஓர் வெகுளியன் - அத்தன்மைத்தான ஒரு பெருங்கோபம் உடையவனாய்; அமரர் ஆதியர் துன்னிய துன்னலர் - தேவர்கள் முதலாக உள்ள தன்னைச் சூழ்ந்திருந்த பகைவர்களை; துணுக்கம் சுற்றுற - அச்சம் சூழும்படி, (அனுமனை நோக்கி); என் இவண் வரவு? நீ யாரை? என்று - நீ இங்கு வந்த காரணம் என்ன? நீ யார்? என்று; அவன் தன்மையை வினாயினான் - அந்த அனுமனுடைய நிலைமையை வினவலானான்.
இராவணன் அனுமனை நோக்கி “என் இவண் வரவு? நீ யாரை?” என்று கேட்கத் தொடங்கும் வார்த்தை, அவனைச் சூழ்ந்திருந்த தேவர்களாகிய பகைவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் வண்ணம் இருந்தது என்க. துன்னலர் - பகைவர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In such a rage, so that dread closed in on
- the gods and the other foes who thronged around him,
- "Why have you come here? Who are you?" so he
- questioned his nature, he whose own nature was Death's.
What the poem says
Irāvaṇaṉ, as terrible as Death, begins to question Aṉumaṉ: why has he come, and who is he?
His very tone fills the gods standing around him, his subjugated enemies, with fear.