கம்பராமாயணம் 5874 · சுந்தர 13.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நேமியோ? - (அவன் அனுமனை நோக்கி) சக்கராயுதம் தாங்கிய திருமாலோ?; குலிசியோ? - வச்சிராயுத பாணியான இந்திரனோ?; நெடும் கணிச்சியோ? - நீண்ட சூலாயுதத்தை உடைய சிவபெருமானோ?; தாமரைக் கிழவனோ? - தாமரை மலரில் தோன்றிய பிரம்ம தேவனோ?; தறுகண் பல்தலை - அஞ்சாமையும் பல்தலைகளையும் உடைய; பூமிதாங்கு ஒருவனோ? - பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஒருவனாகிய ஆதிசேடனோ?; பொருது முற்றுவான் - போர்செய்து இந்த இலங்கையை அழிக்கும் பொருட்டு; நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய் - (மேற்கூறிய ஒருவனாய்) பெயரையும் இயற்கை வடிவத்தையும், மறைத்துக் கொண்டு இங்கு வந்து சேர்ந்தாய்.
திருமால் முதலியவருள் எவனொருவன் தன் பெயரையும் உருவத்தையும் மறைத்துக் கொண்டு இந்த வடிவமாக வந்து போர் செய்யலாயினன் என்று உட்கொண்டு இராவணன் இவ்வாறு கேட்டான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Are you the Discus-bearer? the Thunderbolt-wielder? he of the long axe?
- the Lord of the lotus? the one of the many fearless heads
- who bears up the earth? To fight and destroy us
- you have come here hiding your name and your form!"
What the poem says
Irāvaṇaṉ assumes that no ordinary monkey could have done what Aṉumaṉ did, so he must be one of the great gods in disguise.
He runs through the possibilities: Viṣṇu with his discus, Intiraṉ with his thunderbolt, Śiva with his weapon, Brahmā on his lotus, or Ātiśēṣaṉ, the many-headed serpent who holds up the earth.