கம்பராமாயணம் 5875 · சுந்தர 13.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நின்று இசைத்து - நிலைநின்று தனது பாசத்தால் கட்டி; உயிர் கவர் நீலக்காலனோ? - பிராணிகளின் உயிரைப் பற்றிக் கொள்ளும் கருநிறமுள்ள காலனோ?; குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ? - கிரெளஞ்சகிரி என்னும் மலையில் பட்டு, தனது வேலாயுதம் உட்புகும்படி அதனைத் தாக்கிய வெற்றியை உடைய முருகக் கடவுளோ?; தென் திசை கிழவனோ? - தெற்குத் திசைக்கு உரியவனாகிய யமதர்மராசனோ?; திசை நின்று ஆட்சியர் - மற்றத்திக்குகளில் நின்று ஆளுதலை உடையவர்; என்று இசைக்கின்றவர் யாருள் நீ யாவன்? - என்று சொல்லப்படுகின்றவர் அனைவருள்ளும் நீ யார்?
காலன், தென்திசைக் கிழவன் என்று வேறாகக் கூறியது, காலன் என்பவன் யமனது ஆணையைச் செலுத்தும் ஒரு சேவகனே ஆவன் என்பதை விளக்க வந்தது. காலன் - யமகிங்கரர்களின் தலைவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Are you dark Kālaṉ, who stands and binds and carries off lives?
- the victorious one who hurled his spear right through the mountain?
- the lord of the southern quarter? Of all those who are named
- rulers standing at the quarters, which one are you?"
What the poem says
More guesses: is he Kālaṉ, Death's dark messenger who binds and carries off lives; Murukaṉ, whose spear split the Krauñca mountain; Yama, lord of the south; or one of the other guardians of the directions?
The commentary explains that Kālaṉ and the lord of the south are listed separately because Kālaṉ is only the chief of Yama's servants.