கம்பராமாயணம் 5876 · சுந்தர 13.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அந்தணர் வேள்வியின் ஆக்கி - முனிவர்கள் யாகத்திலிருந்து தோற்றுவித்து; ஆணையின் வந்து உற விடுத்தது - கட்டளைப்படி இங்கு வந்து அடையும் வண்ணம் அனுப்பிய; ஓர் வயவெம் பூதமோ? - ஒரு வலிமை மிக்க கொடிய பூதந்தானோ?; முந்து ஒரு மலருளோன் - எவற்றுக்கும் முன்னதாக (பழமையான) ஒரு தாமரை மலரின் இருப்பவனான பிரமன்; இலங்கை முற்றுற சிந்து என திருத்திய தெறுகண் தெய்வமோ? - இலங்கை முழுவதையும் அழித்து விடு என்று ஏவி, புதிதாகப் படைத்தனுப்பிய பகைத்து எரிக்கும் கண்களை உடைய ஒரு தேவன்தானோ?
முனிவர்கள் என்பவர் தண்ட காரணியத்துள் வசிப்பவர். வேள்வி - அபிசார யாகம். முந்து ஒரு மலர் என்பது திருமாலின் திருநாபிக்கமலம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Are you some fierce, mighty spirit that brahmins raised in their sacrifice
- and sent, by their command, to come here?
- or is it that he of the primal flower said, 'Ilaṅkai, utterly
- destroy it,' and fashioned you, a god with burning eyes?"
What the poem says
Irāvaṇaṉ wonders whether Aṉumaṉ is a demon of destruction conjured up by the sages of the Taṇṭaka forest through a hostile sacrifice and sent against him.
Or perhaps Brahmā, seated on the primal lotus that springs from Viṣṇu's navel, has created a new fiery-eyed god with orders to wipe out Ilaṅkai.