கம்பராமாயணம் 5878 · சுந்தர 13.74

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(யான்) சொல்லிய அனைவரும் - நீ சொன்ன யாரும்; அல்லென் - அல்லன்; சொன்ன - உன்னால் சொல்லப்பட்டவர்களான; அப்புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன் - அந்த அற்ப வலிமையுள்ளவர்களுடைய கட்டளையை ஏற்று வந்தேனும் அல்லேன்; அல்லி அம் கமலமே அனைய செங்கண் - அகவிதழ்கள் நிறைந்த அழகிய செந்தாமரை மலர் போன்ற கண்களை உடைய; ஓர் வில்லிதன் தூதன் - ஒப்பற்ற ஒரு வில் வீரனது தூதனாக; யான் இலங்கை மேயினேன் - நான் இலங்காபுரிக்கு வந்தேன்.

“மும்மூர்த்திகள் முதலியோரது ஆணைகளையும் ஏற்காத யான், இராமதூதனாய் இங்கு வந்தேன்” என்று தனது திறத்தையும் இராம பக்தியையும் வெளியிட்டான் அனுமன். மும்மூர்த்திகளுக்கும் மேம்பட்ட பரம் பொருளே, இராமபிரானாக அவதாரம் செய்துள்ளது என்பது அனுமனது துணிவு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I am none of those you named; nor have I taken on
  2. the orders of those petty powers you spoke of;
  3. the envoy of a bowman whose red eyes are like
  4. the lovely many-petalled lotus, I have come to Ilaṅkai."

What the poem says

Aṉumaṉ answers. He is none of the gods Irāvaṇaṉ listed, and he would not take orders from such feeble powers anyway.

He has come as the envoy of a bowman with eyes like red lotuses. For Aṉumaṉ, Irāmaṉ is the Supreme Being himself, greater than Brahmā, Viṣṇu and Śiva, so the gods Irāvaṇaṉ fears seem small to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1colliya aṉaivarum alleṉ; coṉṉa ap
pulliya valiyiṉōr ēval pūṇṭilēṉ;
alli am kamalamē aṉaiya ceṅkaṇ ōr
villitaṉ tūtaṉ yāṉ; ilaṅkai mēyiṉēṉ.