கம்பராமாயணம் 5897 · சுந்தர 13.93

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'போய் இற்றீர்; நும் புலன் வென்று போற்றிய
வாயில் தீர்வு அரிது ஆகிய மா தவம்
காயில் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள்
தீயில் தூயவளைத் துயர் செய்ததால்.

பொருள் · Meaning in Tamil

காயின் தீர்வுஅரும் - தான் கோபித்தால் தடுக்க முடியாததும்; கேடு அரும் கற்பினாள் - அழியாததுமான பதிவிரதா தருமத்தை உடையவளும்; தீயின் தூயவளை - நெருப்பினும் தூய்மை உடையவளுமான பிராட்டியை; துயர் செய்ததால் - நீர் துன்பப்படுத்தியதால்; நும்புலன் வென்று போற்றிய - உமது ஐந்து புலன்களையும் வென்று அடக்கிக் காத்து வந்ததும்; வாயில் தீர்வு அரிதாகிய மாதவம் போய் இற்றீர்- வாயில் சொல்லி அடங்காத பெருமை உடையதுமாகிய பெரிய தவத்தின் பயனை உங்களைவிட்டு நீங்கி ஒழியப் பெற்றீர்கள். கற்பு, தீர்வுஅரியது; கேடு அரியது, மாதவம் போற்றியது; அரிதாகியது. கற்புடைத் தூயவளுக்குத் துன்பம் இழைத்ததால், தவத்தின் பயன் போயிற்று என்ற வாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You are ruined: the great penance you guarded by conquering your senses,
  2. whose greatness no tongue can tell, is gone,
  3. because you brought grief to her whose chastity cannot be checked when she is angered and cannot perish,
  4. her who is purer than fire.

What the poem says

The merit of Irāvaṇaṉ's long austerities, won by mastering his senses, has been lost because he tormented Cītai. Her chastity is indestructible and her anger irresistible; she is purer than fire itself. Wronging such a woman has stripped the demons of the fruit of all their penance.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pōy iṟṟīr; num pulaṉ veṉṟu pōṟṟiya
vāyil tīrvu aritākiya mā tavam
kāyiṉ tīrvu aruṅ kēṭu aruṅ kaṟpiṉāḷ
tīyiṉ tūyavaḷait tuyar ceytatāl.