கம்பராமாயணம் 5898 · சுந்தர 13.94

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இன்று வீந்தது; நாளைச் சிறிது இறை
நின்று வீந்தது; அல்லால் இறை நிற்குமோ?
ஒன்று வீந்தது நல் உணர் உம்பரை
வென்று வீங்கிய வீக்கம் மிகுத்ததால்.

பொருள் · Meaning in Tamil

நல் உணர் உம்பரை - நல்ல அறிவுடைய தேவரை; வென்று வீங்கிய வீக்கம் மிகுத்ததால் - வெற்றி கொண்டு, அதனால் எழுந்த பூரிப்பு (செருக்கு) எல்லை மீறியதால்; ஒன்று வீந்தது - ஒப்பற்றதாகிய வாழ்வின் பெருமை (உங்களை விட்டு முன்னரே நீங்கிவிட்டது; இறை இன்று வீந்தது - எஞ்சியுள்ள உங்கள் பெருமை இன்றைய நாளிலேயே (பெரும் பான்மையும்) அழிந்து போய்விட்டது; சிறிது - மற்றை எஞ்சியுள்ள சிறுபான்மையும், நின்று நாளை - இன்றைக்கு நின்று நாளை; வீழ்வது அலால் - அழிவதேயாகுமல்லாமல்; நிறை நிற்குமோ ? - அழிவின்றி நிலைத்து நிற்குமோ ? (நில்லாது என்றபடி);

“இன்று இறந்தன நாளை இறந்தன என்று, இராவணன் பிராட்டியைப் பார்த்துக் கூறியதை நினைவூட்டுகின்றது முதல் அடி. வீக்கம் - செல்வம்' என்பது பழைய உரை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Part has perished today; the little that remains will stand awhile
  2. and perish tomorrow; will the whole remain?
  3. One thing has already perished: because the swelling pride of conquering
  4. the wise gods grew too great.

What the poem says

Aṉumaṉ says the demons' glory is already gone: their arrogance after defeating the gods swelled beyond bounds, the greater part of their greatness has fallen today, and the remnant will fall tomorrow. Nothing will endure.

The opening echoes Irāvaṇaṉ's own boast to Cītai, earlier in the book, that the gods had perished today and would perish tomorrow; now the words are turned back on him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṉṟu vīntatu; nāḷaic ciṟitu iṟai
niṉṟu vīntatu; alāl niṟai niṟkumō?
oṉṟu vīntatu nal uṇar umparai
veṉṟu vīṅkiya vīkkam mikuttatāl.