கம்பராமாயணம் 5899 · சுந்தர 13.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தீமை நன்மையைத்தீர்த்தல் ஒல்லாது - “பாவமானது நல்ல அறங்களைஅழிக்கும் வன்மை உடையது அன்று ': எனும் வாய்மை நீக்கினை - என்றுசொல்லப்படுகின்ற ஆன்றோர் மொழியையும் மனம் கொள்ளாது அகற்றிவிட்டாய், நோக்கலாய் - ஒன்றும் சிந்திக்காதவனாய்; மாதவத்தால் வந்த தூய்மை - பெரிய தவத்தைச் செய்ததனால் உனக்கு வந்த தூய்மைநிலையை, தூயவள் தன் வயின் தோன்றிய - கற்பின் தூய்மை உடைய சீதா பிராட்டியின் திறத்து உண்டான; நோய்மையால் துடைக்கின்றனை - காம நோயினால் அழித்துக் கொள்கின்றாய். அறம் வெல்லும்பாவம் தோற்கும்' என்பதை அடி ஒற்றியது, “தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது” என்ற தொடர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- You have cast aside the truth that says evil cannot destroy good;
- the purity that came to you by great penance
- you are wiping away, through the sickness that arose
- over her who is pure, heedless as you are.
What the poem says
The wise say that sin cannot overcome righteousness; Irāvaṇaṉ has ignored this. Without a thought he is destroying the purity his great penance gave him, through his lustful longing for chaste Cītai. The idea is the proverb that dharma wins and sin loses.