கம்பராமாயணம் 5900 · சுந்தர 13.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திறம் திறம்பியகாமச் செருக்கினால்- முறைமை தவறிய காமக் களிப்பால் (சிற்றின்ப அகந்தையால்); மறந்து தம்தம் மதியின் மயங்கினார் - நல்வழிகளை மறந்துவிட்டு, தங்கள் தங்கள் அறிவிலே மயக்கம் கொண்டவர்கள்; இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால் - செத்துச் செத்தும் இழிந்தும் ஏறியும் இவ்வாறு மாறி மாறி வருவது அன்றி; அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார் - (அவ்வாறு) அறவழியை மீறி (மாறி) நடந்தவர் யார் நன்னிலையில் நிற்பவராக இருந்தார்கள் ? (ஒருவரும் இல்லை என்றபடி).
திறம் திறம்பியகாமச் செருக்கு - தம் மனைவியிடத்து இன்பம் நுகர்தலாகிய முறைமை நீங்கி, பிறன் மனை நயக்கும் காமக் களிப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Through the pride of lust that has strayed from the right way,
- those who forget and are confused in their own minds
- do nothing but die and die again, fall and rise;
- who that turned from dharma has ever stood secure?
What the poem says
Those blinded by unlawful desire, desire that turns from one's own wife to another's, forget the right path and are caught in an endless round of death and rebirth, falling and rising. No one who abandoned dharma has ever prospered.