கம்பராமாயணம் 5901 · சுந்தர 13.97

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நாமத்து ஆழ்கடல் ஞாலம் புரந்தவர்
ஈமத்தால் மறைந்தார் இளமாதர் பால்
காமத்தால் இறந்தார் களிவண்டு உறை
தாமத் தாரினர் எண்ணினும் சால்வரோ?

பொருள் · Meaning in Tamil

நாமத்து ஆழ்கடல்ஞாலத்து - அச்சம் தரத்தக்கஆழ்ந்த கடல் சூழ்ந்த இந்த நில உலகில்; இள மாதர் பால் காமத்தால் இறந்தார் - இளமகளிரிடம் கொண்ட மோகத்தால் வரம்பு கடந்து நடந்தவரான; களி வண்டு உறை தாமம் தாரினர் - (தேனைப்பருகியதால்) களிப்புக் கொண்ட வண்டுகள் மொய்க்கும் மலர் மாலை அணிந்த ஆடவர்கள்; அவிந்தவர் ஈமத்தால் மறைந்தார் எண்ணினும் சால்வரோ - புகழ் முதலிய யாவும் அவிந்தவராய், சுடுகாட்டு நெருப்பால் அழிந்து போனவர்கள் எண்ணிக்கையில் அடங்குவார்களோ ? (எண்ணற்றவராவர் என்றபடி). இஞ்ஞாலத்தில், காமத்தால், இறந்தவர் அவிந்தவராகி, ஈமத்தால் மறைந்தவர் எண்ணற்றவர் என்றபடி. களி வண்டுறை தாமத்தாரினர்; அரசர்களைக் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In this world bounded by the fearsome deep sea, those who were extinguished,
  2. who vanished in the funeral pyre, having died through lust
  3. for young women, men wearing garlands where
  4. drunken bees dwell, could they be counted even if one tried?

What the poem says

Countless kings, garlanded men around whose flowers the honey-drunk bees swarm, have overstepped all bounds in their desire for young women, lost all their glory, and ended on the funeral pyre. Their number is past counting. The warning to Irāvaṇaṉ is plain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nāmattu āḻkaṭal ñālattu avintavar
īmattāl maṟaintār iḷamātar pāl
kāmattāl iṟantār kaḷivaṇṭu uṟai
tāmat tāriṉar eṇṇiṉum cālvarō?